Kalyan Jewellers, Thanjavur Main Road, Kumbakonam

No. 11A, Nageswaran North Street
Kumbakonam- 612001

044-66205728

Call Now

Opens at

<All Articles

புதுயுக மனிதர்களின் விருப்பம் நகைகளின் நடைமுறைகளை மாற்றியது எவ்வாறு?

புதுயுக மனிதர்கள் இன்றைய தலைமுறையில் சம்பாதிப்பவர்களாக இருக்கிறார்கள். 25 முதல் 40 வயது வரையிலான இவர்கள் எந்த ஒரு பொருளாதாரத்துக்கும் தூண்களாகத் திகழ்கின்றனர். இளம் நாடான இந்தியாவில் இதுபோன்ற புதுயுக மனிதர்கள் கணிசமாகவே உள்ளனர். புதுயுகம் என்றால் என்ன என்பதை வரையறுக்கும் பல தன்மைகள் உள்ளன. இன்றைய புதுயுக மனிதர்களின் போக்கும், விழிப்புணர்வும் பல விஷயங்களினால் உருவாகின்றன. புதிய தலைமுறை சம்பாதிப்பவர்கள் என்ற முறையில், இவர்கள் பல வகைகளில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். அப்படிப்பட்ட வகைகளில் ஒன்றுதான் தங்கம். தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானது என்பதால் எந்த ஒரு தலைமுறையினரும் இதை மிகவும் விரும்புகின்றனர்.

ஃபேஷன் மற்றும் நகைகளைப் பொறுத்தமட்டில், புதுயுக மனிதர்களுக்கு நல்ல ரசனை இருக்கிறது. எனவே, இவர்கள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல, தங்களது நடைமுறை, விருப்பம் மற்றும் நடைமுறைக்கு ஏற்ற மாதிரி தங்க நகைகளை வாங்குகின்றனர். இப்போது பல கண்ணிகளைக் கொண்ட செயின்கள், முத்து நகைகள், லேசான வைர நகைகள், உங்களுக்குப் பிடித்தமான நிறங்களில் வைர நகைகள் என்று சில நகைகள் நடைமுறையாக இருக்கின்றன.

ஸ்டைலிங்கை குறைவாக வைத்துக் கொள்வது என்பது புதுயுக மனிதர்களிடையே காணப்படும் மற்றுமொரு பொதுவான தன்மையாகும். குறைவாக ஸ்டைல் காட்டுவது என்பதை இன்றைய இளைஞர்கள் பலரும் தங்களது வாழ்க்கை முறையாக ஏற்றுக் கொண்டுள்ளனர். இவர்கள் பல நகைகளை வாங்கி வைக்க விரும்பினாலும், வடிவமைப்புகள் குறைவானதாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். தங்க நகைகளில் சின்னதாகத் தொங்கும் வைர காதணிகள், மெல்லிய மற்றும் ஃபேன்ஸியான ரோஸ் நிறத் தங்க நகை, எளிய முத்துத் தோடுகள், முத்து நெக்லேஸ்கள், ஃபேன்சி பதக்கம் தொங்கும் லைட்டான செயின்கள் ஆகியன இப்போதைய டிரெண்டாக இருக்கின்றன. இவை ‘’குறைவே நிறைவு’’ என்னும் மூலமந்திரத்தை எடுத்துக் காட்டுவது போல பூடகமான முறையில் பொருத்தமாகவும், பகட்டாகவும் கலந்து காணப்படுகின்றன.

ஜியோமெட்ரிக் முறைகளில் தயாரிக்கப்பட்ட நகைகள் இந்தக் காலத்தில் மற்றுமொரு புதிய நவநாகரீகமாக உள்ளன. தோடுகள், தொங்கள்கள், வைரக் காதணிகள், பதக்கங்கள் அல்லது பிரேஸ்லெட்டுகள் ஜியோமெட்ரிக் வடிவமைப்பில்ல் இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். ஏனென்றால் இவை எந்த ஒரு ஆடை அலங்காரத்துக்கும் பொருத்தமாக உள்ளன. சாதாரணமாக இருப்பதற்கும், சபைக் கூட்டத்திற்கும் இவற்றை அணியலாம்.

இந்தக் குறைவான நகைகளில் காணப்படும் ஒரு சுவையான ஸ்டைல் என்னவென்றால் இவற்றை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கலாம். ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட் அணிந்த பெண்களாகட்டும், மிடுக்கான வணிக சூட் அணிந்த பெண்களாகட்டும், ஒவ்வொருவரும் இத்தகைய தோற்றத்தையே விரும்புகின்றனர். மெல்லிய செயின்களை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி கழுத்தில் அணிந்தால், அவை எடுப்பாக பளிச்சிட்டு அனைவரின் கவனத்தையும் கவரும். அதே நேரத்தில் முகத்தில் அடிப்பது போல் இருப்பதில்லை. இதே ஸ்டைலை பிரேஸ்லெட்டுகள் மற்றும் வளையல்களிலும் பயன்படுத்தலாம்.

திருமண அலங்காரங்கள் என்று வரும்போது, புதுயுக மனிதர்கள் நீடித்து நிலைத்திருக்கும் நகைகளை விரும்புகின்றனர். தலைமுறை தலைமுறையாகக் கைமாறி வரும் பழங்கால நகைகள் அழகாக இருப்பதோடு, ஒரு வகையான பாரம்பரிய உணர்வையும் தருகின்றன. ஒரு மணப்பெண் அழகான வண்ணப்பூச்சு உடைய வைர நகைகளாக காதணிகள், பிரேஸ்லெட்டுகள், வளையல்கள், மோதிரங்கள் அல்லது நெக்லேஸ்களை அணியும்போது அவளுடைய ஃபேஷன் உணர்வும், ஆளுமையை எடுப்பாக வெளிப்படுகின்றன.

ஒவ்வொரு தலைமுறைக்கும் அவற்றின் ஃபேஷன் மற்றும் விருப்பங்களைப் பொறுத்து ஒரு புரட்சியே நிகழ்கிறது. இந்தப் புரட்சி அவர்கள் அணியும் ஆடைகள் மற்றும் நகைகளின் மூலமாக மிகச்சிறப்பாக வெளிப்படுகிறது.

Can we help you?