Kalyan Jewellers, Thanjavur Main Road, Kumbakonam

No. 11A, Nageswaran North Street
Kumbakonam- 612001

044-66205728

Call Now

Opens at

Articles

பழங்கால நவநாகரீகம் : மீண்டும் வருகின்றனவா?

On
‘’ஒல்டு இஸ் கோல்டு’’. ஆங்கிலத்தில் இதைவிட அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட வேறொரு சொல் வேறு எதுவும் இருக்க முடியாது என்று சொல்லலாம். ஆனாலும், இனிமேல் இப்படிக் கூறுவது பொருத்தமற்றதாகப் போகக்கூடும். குறிப்பாக, நொடிக்கு நொடி நாகரீகங்கள் மாறிக் கொண்டிருக்கும் ஃபாஷன் தொழிலில் ஏராளமான நாகரீகம் வருகின்றன, போகின்றன. சில காலம் அடங்கியிருந்து பின்னர் மிகவும் பிரபலம் ஆகிவிடுகின்றன. பழங்கால நகைகளைப் பற்றிப் பேசும்போது, நமது மூதாதையர்கள் பயன்படுத்திய நகைகளின் நடைமுறை இன்றைக்கு நாகரீகமாக வருகின்றன. கைவினைக் கலைஞர்களின் மிகவும் நுட்பமான கைவேலைப்பாடுகள்தான் இதற்குக் காரணம். அவர்கள் தங்களது திறமையால் வடிவமைப்பையும், நகைகளையும் என்றென்றும் நிலையான அழகுடன் வடிவமைத்து விடுகின்றனர். மற்றொரு முக்கிய காரணம், பழங்கால நகைகள் பெண்களின் மனதுக்கு மிகவும் நெருக்கமாக அமைந்து விடுகின்றன. ஏனென்றால் தலைமுறை தலைமுறையாகக் கைமாறி வரும் தங்க நகைகளுடன் நுட்பமான மன உணர்வுகள் பின்னிப் பிணைந்துள்ளன. அபூர்வமான தொன்மைச் சிறப்பு மிக்க வடிவமைப்புகளுடன் கூடவே, ஒவ்வொரு பெண்ணும் தனது தாய்/ பாட்டியைப் பற்றிக் கொண்டிருக்கும் இனிய நினைவுகளும் நகைகளின் மதிப்பைக் கூட்டி விடுகின்றன. இன்றைய உலகில் ஃபாஷனாகிவிட்ட பழங்கால நகைகள் சிலவற்றைப் பற்றிப் பார்ப்போம். போல்க்கி போன்ற கட் செய்யப்படாத நகைகளில், சுத்தமான, மெருகூட்டப்படாத வைரங்கள் மிகுந்த கலைநயத்துடன் சோக்கர்களாகவும், நெக்லேஸ்களாகவும் பதிக்கப்பட்டு பின்னல் வேலைப்பாடுடன் ஒளிர்கின்றன. இவை இன்றைய மணப்பெண்கள் மிகவும் விரும்பும் நகைகளாகும். ஏனென்றால், போல்க்கி நகைகள் பார்ப்போரின் கவனத்தை மணப்பெண்ணை நோக்கி ஈர்க்கக்கூடிய அழகுடன் மாபெரும் தோற்றமளிக்கின்றன. எந்த ஒரு பெண்ணும் மிகவும் விரும்பக்கூடிய இன்னொரு வகையான நகை ஜும்க்கி/ஜிமிக்கி/ கோடா கடுக்கன் ஆகும். இவை பல நூற்றாண்டு காலமாக இந்தியா முழுவதும் அணியப்பட்டு வருகின்றன. இந்த வகையான காதணிகள் உண்மையிலேயே அழியாப் புகழுடன் திகழ்கின்றன. ஏனென்றால் ஆரம்பகாலத்தில் இருந்தே இவை எல்லா வயது பெண்களினாலும் மிகவும் நேசிக்கப்பட்டு வருகின்றன. இந்த எளிமையான ஜிமிக்கியை படாடோபமான திருமண உடைகளில் இருந்து அன்றாடம் உடுத்தும் உடைகள் வரை, ஏன் மேற்கத்திய பாணி உடைகளுக்கும் பொருத்தமானதாக வடிவமைப்புகளை உருவாக்கும் நகைக் கலைஞர்கள் புரட்சிகரமாக மாற்றியமைத்துள்ளனர். கடா வளையம் எனப்படும் வைரங்களும், விலை உயர்ந்த ஆபரணக் கற்களும் பதிக்கப்பட்ட தங்க வளையல்கள் மிகவும் பிரபலமடைந்துள்ளன. மிகவும் கனமான இந்த கடாக்கள் பெரும்பாலும் ஜோடியாக அல்லது ஒற்றை வளையலாக அணியப்படுகின்றன. பெண்கள் கை நிறைய மெல்லிய வளையல்களை அடுக்கி அணிந்த காலம் மறைந்து விட்டது. குறைவான எண்ணிக்கையில் முழுமையான நகைகளை பெண்கள் அணிய விரும்பும் இந்தக் காலத்தில் கடா வளையங்களை அணிவதில் அவர்கள் மீண்டும் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். இன்றைய பெண்களிடையே மிகவும் பிரபலமாகிவிட்ட இன்னொரு நகை மூக்குத்தி வளையம் ஆகும். அலங்காரமான பெரிய மூக்குத்திகளில் இருந்து, சின்னதாக வைரம் பதிக்கப்பட்ட நட்சத்திரம் போன்ற மூக்குத்தி வரை மேற்கத்திய டிசைன்களில் எல்லா வகையான வடிவங்களிளும் மூக்குத்திகள் நாகரீகமாக உள்ளன. மாங் டிக்கா என்பது ஒரு அங்குல நீளமுள்ள அலங்காரமான தங்க பதக்கம் ஆகும். மிகவும் நுட்பமான வடிவமைப்பில் வைரங்கள் பதிக்கப்பட்டு செய்யப்படும் இவற்றை திருமணமான பெண்கள் தங்களது தாலியில் சேர்த்து வைத்து பின்னிக் கொள்கின்றனர்.
Publisher: Kalyan Jewellers

புதுயுக மனிதர்களின் விருப்பம் நகைகளின் நடைமுறைகளை மாற்றியது எவ்வாறு?

On
புதுயுக மனிதர்கள் இன்றைய தலைமுறையில் சம்பாதிப்பவர்களாக இருக்கிறார்கள். 25 முதல் 40 வயது வரையிலான இவர்கள் எந்த ஒரு பொருளாதாரத்துக்கும் தூண்களாகத் திகழ்கின்றனர். இளம் நாடான இந்தியாவில் இதுபோன்ற புதுயுக மனிதர்கள் கணிசமாகவே உள்ளனர். புதுயுகம் என்றால் என்ன என்பதை வரையறுக்கும் பல தன்மைகள் உள்ளன. இன்றைய புதுயுக மனிதர்களின் போக்கும், விழிப்புணர்வும் பல விஷயங்களினால் உருவாகின்றன. புதிய தலைமுறை சம்பாதிப்பவர்கள் என்ற முறையில், இவர்கள் பல வகைகளில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். அப்படிப்பட்ட வகைகளில் ஒன்றுதான் தங்கம். தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானது என்பதால் எந்த ஒரு தலைமுறையினரும் இதை மிகவும் விரும்புகின்றனர். ஃபேஷன் மற்றும் நகைகளைப் பொறுத்தமட்டில், புதுயுக மனிதர்களுக்கு நல்ல ரசனை இருக்கிறது. எனவே, இவர்கள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல, தங்களது நடைமுறை, விருப்பம் மற்றும் நடைமுறைக்கு ஏற்ற மாதிரி தங்க நகைகளை வாங்குகின்றனர். இப்போது பல கண்ணிகளைக் கொண்ட செயின்கள், முத்து நகைகள், லேசான வைர நகைகள், உங்களுக்குப் பிடித்தமான நிறங்களில் வைர நகைகள் என்று சில நகைகள் நடைமுறையாக இருக்கின்றன. ஸ்டைலிங்கை குறைவாக வைத்துக் கொள்வது என்பது புதுயுக மனிதர்களிடையே காணப்படும் மற்றுமொரு பொதுவான தன்மையாகும். குறைவாக ஸ்டைல் காட்டுவது என்பதை இன்றைய இளைஞர்கள் பலரும் தங்களது வாழ்க்கை முறையாக ஏற்றுக் கொண்டுள்ளனர். இவர்கள் பல நகைகளை வாங்கி வைக்க விரும்பினாலும், வடிவமைப்புகள் குறைவானதாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். தங்க நகைகளில் சின்னதாகத் தொங்கும் வைர காதணிகள், மெல்லிய மற்றும் ஃபேன்ஸியான ரோஸ் நிறத் தங்க நகை, எளிய முத்துத் தோடுகள், முத்து நெக்லேஸ்கள், ஃபேன்சி பதக்கம் தொங்கும் லைட்டான செயின்கள் ஆகியன இப்போதைய டிரெண்டாக இருக்கின்றன. இவை ‘’குறைவே நிறைவு’’ என்னும் மூலமந்திரத்தை எடுத்துக் காட்டுவது போல பூடகமான முறையில் பொருத்தமாகவும், பகட்டாகவும் கலந்து காணப்படுகின்றன. ஜியோமெட்ரிக் முறைகளில் தயாரிக்கப்பட்ட நகைகள் இந்தக் காலத்தில் மற்றுமொரு புதிய நவநாகரீகமாக உள்ளன. தோடுகள், தொங்கள்கள், வைரக் காதணிகள், பதக்கங்கள் அல்லது பிரேஸ்லெட்டுகள் ஜியோமெட்ரிக் வடிவமைப்பில்ல் இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். ஏனென்றால் இவை எந்த ஒரு ஆடை அலங்காரத்துக்கும் பொருத்தமாக உள்ளன. சாதாரணமாக இருப்பதற்கும், சபைக் கூட்டத்திற்கும் இவற்றை அணியலாம். இந்தக் குறைவான நகைகளில் காணப்படும் ஒரு சுவையான ஸ்டைல் என்னவென்றால் இவற்றை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கலாம். ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட் அணிந்த பெண்களாகட்டும், மிடுக்கான வணிக சூட் அணிந்த பெண்களாகட்டும், ஒவ்வொருவரும் இத்தகைய தோற்றத்தையே விரும்புகின்றனர். மெல்லிய செயின்களை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி கழுத்தில் அணிந்தால், அவை எடுப்பாக பளிச்சிட்டு அனைவரின் கவனத்தையும் கவரும். அதே நேரத்தில் முகத்தில் அடிப்பது போல் இருப்பதில்லை. இதே ஸ்டைலை பிரேஸ்லெட்டுகள் மற்றும் வளையல்களிலும் பயன்படுத்தலாம். திருமண அலங்காரங்கள் என்று வரும்போது, புதுயுக மனிதர்கள் நீடித்து நிலைத்திருக்கும் நகைகளை விரும்புகின்றனர். தலைமுறை தலைமுறையாகக் கைமாறி வரும் பழங்கால நகைகள் அழகாக இருப்பதோடு, ஒரு வகையான பாரம்பரிய உணர்வையும் தருகின்றன. ஒரு மணப்பெண் அழகான வண்ணப்பூச்சு உடைய வைர நகைகளாக காதணிகள், பிரேஸ்லெட்டுகள், வளையல்கள், மோதிரங்கள் அல்லது நெக்லேஸ்களை அணியும்போது அவளுடைய ஃபேஷன் உணர்வும், ஆளுமையை எடுப்பாக வெளிப்படுகின்றன. ஒவ்வொரு தலைமுறைக்கும் அவற்றின் ஃபேஷன் மற்றும் விருப்பங்களைப் பொறுத்து ஒரு புரட்சியே நிகழ்கிறது. இந்தப் புரட்சி அவர்கள் அணியும் ஆடைகள் மற்றும் நகைகளின் மூலமாக மிகச்சிறப்பாக வெளிப்படுகிறது.
Publisher: Kalyan Jewellers

Can we help you?