044-71650125

Call Now

Opens at

Articles

அதிகாரத்தின் ஒரு சின்னமாக ஆபரணக் கற்களின் ராணி எனப்படும் முத்துக்கள்

On
முத்துக்கள் ‘ ஆபரணக் கற்களின் ராணி’ எனக் கூறப்படுகிறது. இதை மெய்ப்பிக்கும் வகையில் முத்துக்களை எல்லோரும் அணிவதில்லை. பெரும்பாலும் தினந்தோறும் அணிவதில்லை. முத்துச்சரம் அணிந்து திகைக்க வைப்பதற்கு ஒருவிதமான வர்க்கம் மற்றும் நளினம் இருக்க வேண்டும். முத்துக்கள், மண்ணுக்கு அடியில் இருந்து தோண்டி எடுக்கப்படும் மற்ற ஆபரணக்கற்களைப் போன்றவை அல்ல. முத்துக்கள் கடலுக்கு அடியில் இருந்து கிடைக்கின்றன. ஆழ்கடலுக்குள் முக்குளித்துச் சென்று முத்துக்கள் எடுக்கப்படுகின்றது. இம் முத்துக்கள் சிப்பி ஓட்டுக்குலிருந்து உருவெடுக்கின்றன. அந்த வகையில் முத்துக்கள் உருவெடுப்பது நம்புவதற்குறிய ஒரு தோற்றமாகும். சிப்பியின் வயிற்றுக்குள் தூசு அல்லது மணல் போன்ற வெளிப்பொருட்கள் நுழையும்போது அவற்றைச் சுற்றிலும் ஒருவிதமான பிசின் போன்றசுறபி வயிற்றுக்குள் சுரந்து காலப்போக்கில் அவை முத்துக்கள் ஆகி பளபளக்கும் ஆபரணங்களாகி விடுகின்றன. ஒரு முத்து இயற்கையாக உருவெடுப்பதற்கு இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. ஒவ்வொரு முத்தும் தனித்தன்மை வாய்ந்தவை. ஏனென்றால் ஒரே அளவில், ஒரே வடிவத்தில், ஒரே விதமான பளபளப்புடன் அனைத்து முத்துக்களும் இருப்பதில்லை. காலங்காலமாக பெண்களை அழகுபடுத்திட முத்துக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பண்டைய கால கிரேக்க வரலாற்றில் இருந்து எகிப்தின் பரோவாக்கள் வரை பலம்வாய்ந்த சீன அரச வம்சங்கள் முதல் மொகலாயப் பேரரசுகள் வரை அரச கருவூலங்களில் முத்துக்களுக்கெனத் தனியிடம் இருந்து வந்துள்ளது. மன்னர்களின் நெருக்கத்தைப் பெற்றவர்களுக்கு முத்துக்கள் அன்பளிப்பாகவும் அளிக்கப்பட்டுள்ளது. அரச குலப் பெண்கள் முத்துக்களை அணிந்து கம்பீரமான தோற்றமளித்துள்ளனர். இன்றைக்கும் கூட, முத்து நகைகள் என்றாலே பெண்களின் இதயத்திலும், அவர்களின் ஆடை அலங்காரங்களிலும் தனி இடம் உண்டு. முத்துக்கள் மிகவும் நுட்பமானவை. அவை முகக் களிம்பு, ரசாயனப் பொருட்கள் போன்றவை அவற்றின் மீது தொடர்ந்து பட்டுக்கொண்டே இருக்குமானால் அவை சேதமடையக்கூடும். எனவே ஒரு விசேஷமான நாட்களில் மட்டுமே முத்து நகைகளை அணியும்படி பரிந்துரைக்கப்படுகிறது. ஒற்றை முத்து பதித்த நகை அணியும் பொழுது உயர்ந்த மற்றும் அழகான தோற்றத்தைத் தரும் . முறையான அலுவலக உடை அணியும்போது முத்துத் தோடுகளை அணிவது நன்றாக இருக்கும். முத்துக்கள் பதிக்கப்பட்ட காதணிகள் கைச்சங்கலிகள் அல்லது வளையல்களை தினசரி நகைகளாக அணியக் கூடாது. ஏனென்றால், அவை உடைந்து சிதறிவிடக்கூடிய அபாயம் அதிகமாக உள்ளது. கோலாகலமான கொண்டாட்டங்களுக்கு, முத்துக்கள் பதிக்கப்பட்ட பிறைநிலாக் காதணிகள் மிகவும் பொருத்தமானதாக இருக்கும். மணப்பெண்ணின் அலங்காரங்களில் தங்கம் மற்றும் வைர நகைகள் முக்கிய இடம் வகித்தாலும், சமய சந்தர்ப்பத்தைப் பொறுத்து முத்து நகைகளுக்கென தனியாக ஓர் இடம் உள்ளது. கழுத்து மற்றும் கழுத்திலுருந்து இருந்து அடுக்கடுக்கான நீளமான கழுத்து மாலைகள் வரை முத்து நகைகள் உங்களுடைய தோற்றத்திற்கு ஒரு விதமான மாற்றத்தையும் தோரனையையும் தருகின்றன. இதற்கு மாறாக, முத்துக்கள் கோர்க்கப்பட்ட ஒற்றைச் சரடு நளினமான ஒர் உயர்வான தோற்றத்தைக் கொடுத்து, முறையான கூட்டங்களுக்கு உங்களை பொருத்தமானவராக ஆக்குகின்றது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் பொருத்தமாக, ஒவ்வொரு நபரின் விருப்பத்திற்கும் ஏற்ப முத்து நகைகளை அழகான பாணியிலும், மிகவும் கவர்ச்சிகரமான வகையிலும் உருவாக்கலாம் என்பது முத்து நகைகளின் சுவையான அம்சமாகும்.
Publisher: Kalyan Jewellers

மணப்பெண்ணுக்கு நகைகளைத் தேர்ந்தெடுப்பதில் அழைப்பு வழிகாட்டி

On
இந்தியா பல விஷயங்களுக்கு பெயர் பெற்றது. இந்தப் பட்டியலில் முதலிடம் வகிப்பது நமது திருமணங்கள் மற்றும் அதனுடன் சேர்ந்த கொண்டாட்டங்கள். தோரணையாக உடையணிந்த சுமார் இரண்டாயிரம் பேர் திரளும் எந்த ஒரு இந்தியத் திருமண நிகழ்ச்சியிலும் மணப்பெண்ணை மிகச் சுலபமாக அடையாளம் கண்டு கொள்ளலாம். மணப்பெண்ணின் அழகு மிளிரும் எடுப்பான அலங்காரங்களும், அவள் அணிந்திருக்கும் கவர்ச்சியான நகைகளும் அவளை தனியாக எடுத்துக் காட்டும். மணப்பெண்ணுக்கு அலங்காரம் செய்யும்போது சரியான நகைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும். பல ஆண்டுகளாகக் கஷ்டப்பட்டு சம்பாதித்து சேமித்த பணத்தைக் கொண்டு மணப்பெண்ணுக்கு நகைகள் வாங்கும்போது நாம் எதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்? வாருங்கள் பார்க்கலாம். கழுத்து அட்டியல், கழுத்துச் சங்கிலி (அ) பதக்கமாலை வட இந்தியத் திருமணங்களில் மணப்பெண்ணுக்கு வழக்கமாக பளிச்சென மின்னும் தாவணியை அணிவிப்பார்கள். அதில் பட்டுநூலில் வைத்து கோர்க்கப்பட்ட ஆபரணக் கற்கள் மிகவும் நுட்பமாக நெய்யப்பட்டிருக்கும். இந்த தாவணியில் படகு போன்ற சங்கு கழுத்தில் இருந்து இனிமையான இதய வடிவிலும், தாழ்வாக கீழ்நோக்கி இறங்குவது போலவும் கழுத்து அட்டியல் வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த திருமண ஆடைக்குப் பொருத்தமான வகையில் கழுத்தில் அட்டிகை அணிவது பொருத்தமானதாக இருக்கும். அல்லது நீளமான கழுத்துமாலை அல்லது இரண்டையும் சேர்த்து அணியலாம். உடம்பின் எல்லா இடங்களிலும் ஆடை மீது அளவுக்கு அதிகமாக வைரங்களாலும், மினுமினுக்கும் ஆபரணக் கற்களாலும் அலங்கரிப்பது உங்களுக்கு ஏதோ ஒரு வகை நடனத்தின் தோற்றத்தைத்தான் கொடுக்கும். ஆடையின் அழகையும், உங்களின் அழகையும் உயர்த்தி காட்டும் நகைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியமாகும். நகை உலோகங்களை அழகுறக் கலந்து பயன்படுத்துதல் தங்கம், பிளாட்டினம், வெள்ளை தங்கம், இளஞ் சிவப்பு தங்கம் போன்ற உலோகங்களைக் கலந்து நகைகளை அணிந்தால் உங்கள் தோற்றம் அழகுகுறைந்து காணப்படும் என்று பொதுவாக நம்பப்படுகிறது. ஆனால், புத்திசாலித்தனமாகவும், அழகாகவும் நகை உலோகங்களை கலந்து உபயோகித்தால் அது உங்கள் தரத்தை உயர்வாக காட்டும். உலோகங்களைக் கவனமாக கலந்து பயன்படுத்தும்போது அது உங்களுக்கு அற்புதமான மணப்பெண் தோற்றத்தைக் கொடுக்கும். வண்ணங்களைக் கலக்க வேண்டாம் வெவ்வேறு நிறங்களிலான ஆபரணக் கற்கள் எடுப்பாக இருக்கும் என்பது உண்மைதான். சரியான உடைகளுடன் சேர்த்து இந்தக் வண்ண வண்ண ஆபரணக் கற்களை அணியும்போது அது அழகுக்கு அழகுகூட்டுவதாக இருக்கும். ஆனால், ஒற்றை தோற்றம் பலவகைக் வண்ணங்களில் நகைகளை அணிவது பொருத்தமாக இருக்காது. உதாரணமாக, துளிர் நிழலில உங்களுடைய திருமண ஆடை இருக்குமானால், பிரகாசமான ஒரே ஒரு ஒற்றைக் வண்ணத்தில் ஆபரணக்கல் நகை அணியுங்கள். பிரகாசமான மணப்பெண் ஆடைக்கும் மென்மையான வண்ணத்தில் ஆபரணக் கல் நகைகள் பொருத்தமாக இருக்கும். உங்களுடைய திருமண ஆடைக்கு பொருத்தமான நகைகளைத் தேர்ந்தெடுங்கள் திருமண ஆடை பிரம்மாண்டமாக இருக்கும்போது, ஆடையின் அழகையும், தோரணையும் தனியாக எடுத்துக் காட்டும் வகையில், சாதாரண ஜோடி நகைகளின் தோரணையும் புத்திசாலித்தனம். மாறாக, உங்களுடைய திருமண ஆடை சாதாரணமாக இருக்குமானால், உங்களுக்கு முற்றிலும் பிரம்மாண்டமான இந்திய மணப்பெண் தோற்றத்தைக் கொடுக்கும் அதனால் எடுப்பான நகைகளை அணியுங்கள். திருமண நாளில் அனைத்து நகைகளையும் அணிய வேண்டாம் பிரம்மாண்டமான இந்திய மணப்பெண் தோற்றம் என்று வரும்போது, நகைப்பெட்டியில் உள்ள அனைத்து நகைகளையும் எடுத்து அணிந்து கொள்வதால் மட்டும் பிரம்மாண்டமான தோற்றம் வந்து விடாது. ஒட்டுமொத்தமான பளிச்சென்ற தோற்றத்திற்காக பொருத்தமான நகைகளைக் கலைநயத்துடன் தேர்ந்தெடுத்து அணிவதுதான் சிறப்பு. சில சமயங்களில், ஒரு குறிப்பிட்ட தோற்றத்தைப் பெறுவதற்காக, அதிகமான நகைகளை கழற்றி வைப்பதும் புத்திசாலித்தனமாகும். திருமணக் கொண்டாட்டங்களுக்கு பிறகும் சிந்தியுங்கள் திருமணக் கொண்டாட்டங்கள் சில நாட்களுக்குத்தான் நீடிக்கும். ஆனால் நகைகள் பல வருடங்களுக்கு தொடர்ந்து நீடித்து வரக்கூடியது. எனவே, ஒரு நகையைத் தேர்ந்தெடுத்து வாங்கும்போது, அதை மறுபடியும் பயன்படுத்துவது மற்றும் இதர ஆடைகளுக்குப் பொருத்தமாக இருப்பது ஆகியவற்றைப் பற்றிச் சிந்தியுங்கள். தென்னிந்திய மணப்பெண்ணுக்குரிய நகைகளை அடுக்கடுக்காக அணிவது ஒரு தென்னிந்திய மணப்பெண்ணுக்கு பொதுவாக பட்டுச்சேலையுடன் கழுத்தில் பற்பல நகைகள் அட்டியலில் இருந்து குட்டைக் கழுத்து மற்றும் நீளக்கழுத்து பதக்கமாலைகள் வரை அணிவிக்கப்படுகின்றன. எனவே எடுப்பான தோற்றத்திற்காக இந்த பதக்கமாலைகளை அழகாக வரிசைப்படுத்தி அணிவது முக்கியமாகும். முடிவில், மணப்பெண்ணான உங்களுக்கு மிக முக்கியமான கருத்து என்னவென்றால், நீங்கள் உருவாக்கியுள்ள தோற்றத்தை நீங்களே நேசிக்க வேண்டும். எனவே, உங்களை மையப்படுத்தியே, உங்களை மகிழ்விக்கக்கூடிய நகைகளைத் தேர்ந்தெடுங்கள். மணப்பெண் என்ன ஒரு அழகு ! என்று தானாகவே கூறிவிடுவார்கள்.
Publisher: Kalyan Jewellers

Can we help you?