Kalyan Jewellers, Shabia-Mussaffah, Abu Dhabi

Shop No 1 & 2, Ground Floor
Abu Dhabi- 43680

971-25500733

Call Now

Opens at

<All Articles

கல்யாண் நகை மாளிகையின் வேதா அணிவகுப்புடன் தீபாவளி

கொண்டாட்டங்களில் புதுமையை புகுத்துவோம் வாருங்கள்.தீபத்திருவிழா தீபாவளியன்று கோலங்களால் வீட்டை அலங்கரித்து, மகிழ்ச்சியுடன் புத்தாடைகளை அணிந்து தோரணையாக தோன்றுவதை அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்குகிறோம். ஏனெனில் தீபாவளி தன்னுடன் தோழமை, செல்வம் மற்றும் ஈடு இணையற்ற மகிழ்ச்சியை கொண்டு வருகிறது. இது மிகவும் ஆடம்பரமாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. ஆனால், பண்டிகை தீபங்களைப் போலவே உங்கள் அலங்காரத்துக்கு மேலும் மெருகூட்டும் ஒரு விஷயம் இருக்குமென்றால் அது நகைகள் மட்டுமே.
தன்தேரஸ் தீபாவளிக்கான பண்டிகை சூழலை உருவாக்குகிறது. ஐந்து நாள் தீபாவளி பண்டிகையின் முதல் நாள் தன்தேரஸ் அன்று பொருட்கள் வாங்குவது அதிர்ஷ்டம் மற்றும் செல்வ செழிப்பை பெறுவதற்கான கதவைத் திறக்கிறது.

நகைகளை சேர்ப்பது, ஒரு வசதியான வருங்காலத்துக்கான குலதனத்தை உருவாக்கி, பின்னர் அதை உருவாக்கிய தனித்துவ கதைகளில் மூழ்கி மகிழ்வதற்கான ஒரு வாய்ப்பாக பொதுவாக கருதப்படுகிறது. மேலும் இது நமது எதிர்கால பாதுகாப்புக்கான ஒரு சிறந்த ஆதாரமாகவும் இருக்கும். ஆனால், அனைத்துக்கும் மேல், கலையுணர்வுடன் கூடிய ஈடு இணையற்ற அழகு இந்த நகைகளுடன் பின்னிப் பிணைந்துள்ளது. தீபாவளி பண்டிகை இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. தீபத்திருநாளை கொண்டாடுவதற்கான சடங்குகள் ஒவ்வொரு பிராந்தியத்திலும் வித்தியாசமாக இருக்கலாம். ஆனால் அது வழங்கும் மகிழ்ச்சியோ பொதுவானது. இவ்வாறாக, தீபாவளிக் காய்ச்சல் இந்தியா முழுவதும் பரவுகிறது. தீபத்திருநாளாம் தீபாவளி, நமது மனச்சோர்வு மற்றும் மனதில் சூழ்ந்திருக்கும் இருளை வாழ்விலிருந்து நீக்கும் ஒரு அடையாளமாக உணரப்படுகிறது. உண்மையில் அனைத்து இந்திய பாரம்பரியங்களிலுமே தீபாவளி முக்கியமான பண்டிகையாக கருதப்படுகிறது. அனைவரும் கொண்டாடும் இந்த பண்டிகையை, அனைத்தையும் உள்ளடக்கிய ஒன்றாக காண வேண்டும்.

இந்த பண்டிகை எல்லாரையும் இணைப்பது போல், இந்த பண்டிகைக்காக தேர்ந்தெடுத்து அணியப்படும் நகைகளும், பிராந்திய வேறுபாடின்றி அனைவரையும் இணைக்கிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தான அடையாளமான நகைகள் அனைத்தும், தங்களுக்கே உரிய சொந்த தனித்துவ அழகை கொண்டுள்ளன. எனவே, இவை பிரகாசிப்பதற்கான சிறந்த நேரம், தீபத்திருநாளைக் காட்டிலும் வேறு எதுவாக இருக்க முடியும்? பல்வேறு பிராந்திய பரம்பரை நகைககளும் கவர்ச்சியான அம்சங்களை கொண்டிருப்பதுடன், அவை ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் கேட்டு மகிழ ஒரு தனித்துவ கதை இருப்பதையும் நாம் பார்க்கிறோம்.

இந்த மகிழ்ச்சியான கொண்டாட்டம் ஒருசில நாட்களுக்குத்தான். ஆனால், அதற்காக நீங்கள் வாங்கும் இந்த நகைகளோ பல தலைமுறைகளுக்கு நீடிக்கும். ஒவ்வொரு நகையும் ஒரு பிரத்யேக உணர்வை பிரதிபலிக்கிறது. நகை அணிதல் அலங்காரத்தை மட்டுமின்றி, அதையும் விட ஆழமாக, ஒரு பெண்ணாக இருப்பதின் சாரத்தையும் வெளிப்படுத்துகிறது..

நகைகள் ஒரு பெண்ணின் அழகை வலியுறுத்துவதுடன், அவளின் சிறந்த அம்சங்களையும் வெளிப்படுத்துகின்றன. ஒரு அழகான உடையை அதற்கு பொருத்தமான ஆபரணங்களுடன் அணியும் வரை, அதன் அழகு முழுமையாகாது.

சமகாலத்திய அம்சம் பொருந்திய பழமையான நகைகளும் (Antique Jewellery) மற்றும் பிராந்திய எல்லைகளைத் தாண்டிய, கலையழகு ததும்பும், கையால் வடிவமைக்கப்பட்ட அழகான நகைகளும், நகை சேமிப்போரின் பொக்கிஷ மையமாக விளங்குகின்றன.

புதிய நகைகளின் பளபளக்கும் நேர்த்தி மற்றும் குறிப்பிடத்தக்க சிறப்பைத் தவிர,வரலாற்றில் வேர் பதித்திருக்கும் கான்டெம்பரரி நகைகளில் ஏதோ ஒரு மயக்கும் அம்சம் இருப்பதை பார்க்கிறோம். நூற்றாண்டு கால பழைய மரபுகள் மற்றும் சம காலத்திய நகைகளின் சரியான மாற்றாக பண்டிகைக்கால நகைகள் விளங்கும்.

நுணுக்கமான வடிவமைப்புகள் மற்றும் காலத்தால் அழியாத நேர்த்தியுடன், மாறுபட்ட வடிவங்கள் மற்றும் நிறங்களை இணைத்து மகிழும் ஒரு பெண்ணின் நகை அணிவகுப்புகளில், கல்யாண் நகை மாளிகையின் வேதா அணிவகுப்புகளில் ஒரு சில நகைகளாவது கட்டாயம் இடம் பெற வேண்டும். தங்கத்தில் செய்யப்பட்டு, விலை மதிப்புள்ள மற்றும் விலை குறைவான கற்கள் பதிக்கப்பட்ட இந்த பாரம்பரிய கைவினை நகைகளை நாங்கள் மிகவும் விரும்புகிறோம். குறைவானதே அதிகம் என நம்பும் நவீன பெண், பண்டைய, நேர்த்தியான இருந்தும் நுட்பமான வடிவமைப்புகளைப் பாராட்டுகிறாள்.

இந்த தீபாவளியில், நாடு முழுவதிலிருந்துமானஆன்டிக் நகைகளை கலந்து மற்றும் பொருத்தம் செய்யுங்கள் அல்லது சில நுண்ணிய ஆனால் பாராட்டுக்குகந்த கான்டம்பரரி நகைகளை வாங்கி மகிழுங்கள். இந்த தீபாவளியில், நீங்கள் எப்போதும் ஆக விரும்பும் நகை ஆர்வலராக அவதாரமெடுங்கள்.

ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய நகைகள் அனைத்தையும் சேகரித்து மகிழுங்கள். இந்தியாவின் பல்வேறு பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றும் வெவ்வேறு பாகங்களுக்கே உரிய தனித்துவ கைவினைத் திறனை குறிக்கும் பாரம்பரிய நகைகளின் அணிவகுப்பினை உன்னிப்பாக உருவாக்குங்கள். முத்து, காசு மாலை, தாலி, அடுக்கு மோதிரங்கள், பட்டை தீட்டாத வைரங்கள் பதித்த வளையல்கள், போல்கி வேலை, மீனாகாரி அல்லது டெம்பிள் நகை ஆகியவை நகை ஆர்வலர் ஒருவரின் அணிவகுப்பில் கட்டாயம் இருக்க வேண்டிய ஒருசில நகைகளாகும்.

தமிழ்நாட்டின் பாரம்பரிய நகைகள் அவற்றின் நேர்த்தியான கலைத்திறனுக்கு பெயர் பெற்றவை. இவை இந்தியாவின் சிறந்த கலாசாரத்தை சித்தரிப்பதுடன் தென்னிந்தியாவின் மலர் வடிவமைப்புகள் மற்றும் கலைப்பண்பு கூறுகள் பொறிக்கப் பெற்றிருக்கின்றன.

எப்பொழுதும் நீடிக்கும் நகைகளின் வரிசையுடன் டென்பிள் நகை அணிவகுப்பான தடித்த, பருமனான பாரம்பரிய நகைகள், அனைவரின் கவனத்தையும் உங்கள் பக்கம் ஈர்ப்பது உறுதி. கூடுதலாக, என்றென்றும் வசீகரிக்கும் ஒட்டியாணம், காசு மாலை மாங்காய் மாலை அல்லது கொடி மாலை போன்ற போன்ற நீண்ட செயின்கள் போன்ற ஆன்டிக் நகைகள் மற்றும் அழகான, அடுக்கு மாலை சாவடி ஆகியவை இந்த அணிவகுப்பில் இடம் பெற்றுள்ளன. ஒரு ஜோடி ஜிமிக்கி மாட்டலும் அடங்கியிருக்கிறது. ஜிமிக்கி என்பவை நீண்ட மணி வடிவ ரத்தினம் பதித்த காதணிகள். மாட்டல் என்பது காதுத் தோடுகளை காதுகளில் பொருத்தி வைக்க, உங்கள் தலை முடியுடன் இணைக்கும் கொக்கியுடனான ஒரு செயின். மூக்குத்திகளான பேசரி மற்றும் புல்லாக்கு போன்றவையும் மற்றும் மோதிரங்களும் மென்மையான இதயம் படைத்தவர்களுக்கானவையல்ல. மேலும், இந்தோ-நவீன ரக ஆடைகளுடன் புல்லாக்கு அணிவது, அலங்காரத்தின் முன்னோடியாக பன்மடங்கு அதிகமாக கவரும்.

மகாராஷ்டிர நகைகள் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட டெம்பிள் நகை கருத்துக்களுக்கு பெயர் பெற்றவை. மேலும், அந்த மாநிலத்தின் புகழ்பெற்ற போர் வீரர்கள் மற்றும் மன்னர்களால் ஈர்க்கப்பட்டு பாரம்பரிய நகைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

அலங்கார கற்கள் பதித்த நகைகளை உங்களின் பாரம்பரிய உடைகளுடன் அணிந்து, உங்கள் தோற்றத்தின் அழகை மேலும் அதிகரித்துக் காட்டுங்கள். வின்டேஜ் வரிசையிலான கைர்மா நிமா காதணிகள் மற்றும் தமயந்தி நிமா வளையல்கள் போன்ற நுணுக்கமான வேலைப்பாடுடைய நகைகளுடன், எங்கள் நகை அணிவகுப்பிலுள்ள நேர்த்தியான மகாராஷ்டிர கழுத்துமாலை, காதணிகள், மற்றும் வளையல்களை கண்டுபிடியுங்கள்.

போல்கி நகை நிரந்தரமாக நீடிக்கும் அதே நேரம், ஒரு பூர்வீக உணர்வையும் வெளிப்படுத்துகிறது. ஒரு போல்கி நகை மிகச் சிறந்த மற்றும் புராதனமானமான பாரம்பரிய நகைகளில் ஒன்றாக இருப்பதால் இதை தனது நகை கலெக்ஷனில் ஒரு இந்தியப் பெண் பெற்றிருப்பது மிக மதிப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

போல்கி நகைகள் சரித்திரத்தில் வேரூன்றி எப்போதும் பிரசித்தமாக விளங்கும் அணிய அழகான ஒரு நகையாகும். கான்டெம்பரரி (மூர்வி அனோக்கி கோல்டு நெக்லஸ்) மற்றும் (பாரம்பரிய) ட்ரெடிஷனல் (கார்வாரி அனோக்கி கோல்டு நெக்லஸ்) வடிவமைக்கள் இரண்டிலும் இடம் பெற்றுள்ள அசாதாரண கவனத்துடன் விரிவாக வடிவமைக்கப்பட்ட பிரத்தியேக போல்கி கழுத்துமாலை அணிவகுப்புகளை நாம் அனைவரும் விரும்புகிறோம்.

வைரம் உண்மையில் ஒரு பெண்ணின் சிறந்த தோழி. அது ஒரு விண்மீன் போன்று ஒளிர்கிறது மற்றும் ஒர் நேர்த்தியான மற்றும் அதிநவீன தோற்றத்தை வழங்கும் பொருட்டு செதுக்கப்படுகிறது. சிறியதாக அழகாக இருக்கும் திண்மமான வைர நகைகள், ஒருபோதும் ஸ்டைலில் இல்லாமல் போகாது. எனினும், திண்மமான வைர மோதிரங்கள் கால வரம்பற்ற கிளாசிக்காக இருக்கும் அதே நேரம், வண்ணமயமான ரத்தினங்களின் புகழும் அதிகரித்து வருகிறது.

நீங்கள் விரும்பும் பெண்ணுக்கு பரிசளிக்க நீலக்கல், சிவப்புக்கல் போன்ற தீர்மான வைரங்களைப் பரிசளிப்பதுதான் மிகச்சிறந்த வழி. நீலக்கல் செல்வம், ஆசிகள் மற்றும் பரிசுகளை ஈர்க்கிறது. மேலும், நீலக்கல் எதிர்மறை ஆற்றல்களுக்கு (negative energies) எதிரான பாதுகாப்பை அளித்து, மனதை அமைதிப்படுத்தி, உள்ளுணர்வை வலிமைப்படுத்தவும் உதவும் என்றும் சிலர் கூறுகின்றனர். இலை போன்ற நுணுக்கமான வடிவம் மற்றும் ஒளிரும் பிரகாசத்துடன் கூடிய சிவப்புக்கல் காதணிகள், பண்டிகை உற்சாகத்துடன் சிறப்பாக ஒத்திசைகிறது. பெரும்பாலான செந்நிற சிவப்பு ரத்தினங்களைப் போல, ஸ்பைனலும், இரக்கம் மற்றும் வீரியத்துடன் தொடர்பு படுத்தப்படுகிறது. இந்த இரண்டு நகைகளுமே எந்த சேகரிப்பாளரின் அணிவகுப்பிலும் முக்கிய பங்கு பெறுகின்றன. ஒரு காலத்தை கடந்த நகை எப்போதுமே உங்களின் உடைகளுக்கு ஒரு தனிக் கவர்ச்சியை கூட்டும். ஆனால் பண்டிகை கொண்டாட்டத் தேவைகளுக்கு நீங்கள் மெலிய, நேர்த்தியான நகைகளை விரும்பினால், எங்களிடம் எல்லா சந்தர்ப்பங்களிலும் அணியவும் பரிசளிக்கவும் ஏற்ற வகையில், வளையல்கள் (மஞ்சள் தங்க வளையல்கள்), அழகான செயின்கள் (இட் கிலா நிவாரா கோல்டு செயின்), மற்றும் கவர்ச்சியான முத்துகள் (டிபேஷி முத்ரா தங்க முத்துகள்) ஆகியவை எங்களிடம் உள்ளன.

கான்டெம்பரரி மற்றும் கைத்தறி நகைகள் அற்புதமான உயர்ந்த நகைகள் என்பதில் சந்தேகமேயில்லை. இருப்பினும், ஒரு இயற்கை நகையைப் போல எதுவும் இருக்க முடியாது. இவை வைர மோதிர கொத்துடன் இணைந்தால், பாரம்பரிய நகைகளை விரும்பும் மற்றும் தன்னுடைய நகைகள் இன்றைய நகை மொழியை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டுமென விரும்பும் எந்த நகை விரும்பியின் மனதையும் அவை கொள்ளை கொள்ளும் என்பதில் சந்தேகமே இல்லை.

ஒவ்வொரு இந்தியனும் ஆவலுடன் காத்திருந்து, தீபாவளிப் பண்டிகையை மனதார வரவேற்கிறான். முடிவாக, தீபத்திருநாள் கொண்டாட்டம் இந்தியாவின் மிக விரும்பப்படும் பண்டிகையாக விளங்குவதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை. இந்த தினத்தை அதிக அரவணைப்பு மற்றும் இரக்கத்துடன் கொண்டாடுங்கள். பரந்த நோக்கத்தை நாம் நெருங்கும் இந்த தருணத்தில் நமது நகைகளின் பன்முகத்தன்மையையும் நினைவில் கொள்வது மிக முக்கியம்.

இந்த பண்டிகை காலத்தில் ஒரு புதிய வெளிச்சத்துடன் உண்மையான இந்தியத்தன்மையை பிரதிநிதித்துவப்படுத்தும் வழியை ஆராயுங்கள். தனக்கே உரிய தனித்துவ அழகு கொண்ட ஒரு உச்சநிலை இது. பல்வேறு தாக்கங்கள் மற்றும் கலாசாரப் பரிவர்த்தனைகளின் பலன். எனவே, உங்கள் கலாசார மற்றும் சமூக பாரம்பரியத்திலிருந்து அதை கடன் வாங்கி, தீபாவளியை அதன் உண்மையான மகிழ்ச்சியுடன் அனுபவியுங்கள். மகிழ்ச்சியாக வாங்கி, அதை உங்களின் அன்புக்குரியவர்களுக்கு பரிசளித்து வாழ்நாள் முழுதும் நீடிக்கக் கூடிய ஒரு மாறுபட்ட அணிவகுப்புகளைத் துவங்குங்கள். தற்போது பழக்கத்தில் உள்ள நமது பாரம்பரியம் மற்றும் உள்ளடக்கிய தன்மையை பறைசாற்றும் பண்டிகை நகைகளை தேர்ந்தெடுங்கள்.

இந்த உணர்வைதான் எங்களின் பிரீமியம் கைவினை நகை அணிவகுப்புகளுடன் நாங்கள் கொண்டாடுகிறோம். நாடு முழுதும் உள்ள கல்யாண் ஜுவல்லர்ஸின் நேர்த்தியான நகை ரகங்கள் இன்றி இது முழுமையாகாது.

Can we help you?