my kalyan mini store - Articles

பிரபலங்கள் - ஈர்ப்பு நகை ஸ்டைல்கள் - பார்ட்டி தொகுப்பு

Publisher: blog

விடுமுறை சீசன் வந்து விட்டது. இதன் பொருள் பண்டிகை கூட்டங்களில் பளிச்சிட மற்றும் பிரகாசிப்பதற்கான நேரம் வந்து விட்டது. உங்கள் விடுமுறை ஸ்டைலில் கவர்ச்சியை சேர்க்க நீங்கள் விரும்பினால், சில பிரபலங்கள் அணியும் நகைகளால் ஈர்க்கப்பட்ட நகை ஸ்டைல்களை உங்களுக்கு வெள்ளிப்படுத்துகிறோம். இவை அனைவரையும் உங்களை திரும்பிப் பார்க்கச் வைக்கும் என்பது உறுதி.

 

எனினும் எளிமையின் நேர்த்தியை எதனாலும் விஞ்ச இயலாது. எளிமையில் மறுக்கவியலாத ஒரு கவர்ச்சி இருக்கத்தான் செய்கிறது. இதைத்தான் என்றென்றும் அழகிய நடிகையும், எங்கள் KJ பிராண்ட் அம்பாசிடருமான ரஷ்மிகா மந்தானா உருவகப்படுத்துகிறார். இரட்டை - அடுக்கு வைரம் பதித்த சோக்கர் நெக்லஸை தேர்ந்தெடுத்ததின் மூலம் அவர் தனது ஸ்டைலை தனித்துவமாகியுள்ளார். பண்டைகாலத்தை ஒத்த தொங்கட்டான்களுடன் சேர்த்து, ஒரு நட்சத்திரத்தைப் போல ஜொலியுங்கள். வேலைப்பாடுகள் நிறைந்த ஒரு ஜோடி வளையல்கள் , உங்களின் ஒட்டுமொத்த தோற்றத்துக்கு ஒரு விளையாட்டுத்தனமான, பண்டிகை தொடுதலை சேர்க்கும். உங்களின் ஆளுமையை பிரதிபலிக்கும் மேம்பட்ட தோற்றத்துக்கென பல்வேறு டிசைன்களை மிக்ஸ் அண்ட் மேட்ச் செய்யவும்.

 

பாரம்பரிய நிகழ்ச்சிகளுக்கென ஒரு தங்க கவர்ச்சியை சேர்க்க நீங்கள் விரும்பினால், பாரம்பரிய டெம்பிள் டிசைன் நகைகளை அணிந்துள்ள மராத்தி நடிகையும், எங்களின் பிராண்ட் அம்பாசிடருமான பூஜா சாவந்த்-ஐ கவனியுங்கள். ஒரு நீண்ட ஹாரம் மற்றும் ஒரு பொருத்தமான சின்ன நெக்லஸ், உங்கள் பாரம்பரிய தோற்றத்துக்கு நேர்த்தியை சேர்க்கும். ஜிமிக்கிகள் போன்ற பொருத்தமான காதணிகளை தேர்ந்தெடுத்து, ஒரு அழகான நெற்றிச் சுட்டியையும் அணிந்து, உங்களின் பாரம்பரிய தோற்றத்தை மேம்படச் செய்யுங்கள். ஒரு லெஹங்கா அல்லது புடவையை அணிந்திருந்தால், ஒரு ஒட்டியாணம் அல்லது தங்க பெல்ட் அணிந்து உங்கள் கவர்ச்சியை அதிகரியுங்கள். ஒரு ஒற்றை தங்க கடா அல்லது வகை வகையான வளையல்களை அணிந்து உங்களின் தோற்றத்தை முழுமையாக்குங்கள் மற்றும் கவர்ந்திழுக்கும் ஒரு மோதிரத்துடன் உங்களின் ஸ்டேட்மெண்ட் அலங்காரத்தை நினைவு படுத்துங்கள். தங்க நகைகள் உங்கள் தோற்றத்துக்கு அழகையும் , செழுமையும் சேர்த்து, பண்டிகைக் கூட்டத்தில் நீங்கள் தனித்து தோன்றுவதை உறுதிபடுத்தும்.

 

கிறிஸ்துமஸ் பார்ட்டியில் அனைவரின் உள்ளத்தையும் கவர்ந்திழுக்கும் தோற்றத்துக்கென, சினிமா நடிகையும், KJ பிராண்ட் அம்பாசிடருமான வாமிகா கபி-இடமிருந்து உத்வேகத்தைப் பெறுங்கள். ஒரு அழகான மற்றும் மனதை மயக்கும் வைர நெக்லஸ், அனைவரையும் உங்களை கவனிக்க வைக்கும். இது எந்த ஒரு பார்ட்டியிலும் உங்களை ஜொலிக்க வைக்கும் மற்றும் ஒரு உண்மையான நட்சத்திரமாக பிரகாசிக்கச் செய்யும். நெக்லஸுடன் ஒரு ஜோடி பளிச்சிடும் வைர தொங்கட்டான்களை ஜோடி சேருங்கள். ஒரு சில ஒற்றை வைரம் பதித்த வளையல்களை அணிந்து, உங்கள் தோற்றத்தை முழுமையாக்குங்கள். மேலும் வைரங்கள் பதித்த பிரேஸ்லெட்டுகளை முயற்சித்து, உங்கள் அழகை கூட்டுங்கள். வைரங்களின் வெண்மை நிறத்தை பிரகாசிக்கச் செய்ய, அதற்கு எதிரிடையான பச்சை நிறத்தைக் கொண்ட மரகதக் கற்கள் பதித்த ஸ்டேட்மெண்ட் மோதிரங்களை அணியுங்கள். அட்டகாசமான நேர்த்தியுடன் அழகாகத் தோன்றுங்கள்.

 

எந்த ஒரு நிகழ்ச்சியிலும், போல்கி நகைகள் ஒரு விசேஷமான இடத்தை பிடிக்கின்றன மற்றும் குஜராத்தி நடிகையும், KJ பிராண்ட் அம்பாசிடருமான கிஞ்ஞல் ராஜ்ப்ரியா அதன் அழகை நேர்த்தியுடன் வெள்ளிப்படுத்துகிறார். ஒரு அழகான குந்தன் நெக்லஸை, பொருத்தமான காதணிகளுடன் அணிந்து, உங்கள் தோற்றத்தை மேம்படுத்துங்கள். எதிர்மறையான நிறங்கள் கொண்ட நகைகளை, நீங்கள் அணிய திட்டமிட்டுள்ள பாரம்பரிய உடையுடன் அணிந்து உங்கள் தோற்றத்தின் ஸ்டைலை அதிகரியுங்கள். உங்கள் அழகு அதிகமாக வெள்ளிப்படுவதுடன், உங்களை ஒரு தைரியமானவர் மற்றும் அழகானவர் என்ற மாயையும் அது உருவாக்கும். ஒவ்வொரு கையிலும் மீனாகாரி வேலை அல்லது குந்தன் டிசைன் கொண்ட ஒரு ஒற்றை கடாவை அணிவதுடன், ஒரு ஸ்டேட்மெண்ட் மோதிரத்தையும்  அவற்றுடன் அணியுங்கள். இப்பொழுது எந்த ஒரு பார்ட்டியிலும் பிரகாசிக்க நீங்கள் தயாராகி விட்டீர்கள்.

 

இந்த விடுமுறை சீசனில், நீங்கள் அல்ல, உங்கள் ஆபரணங்கள் பேசட்டும் மற்றும் உங்களுக்கு விருப்பமான பிரபலங்களின் ஸ்டைல் தேர்வுகளிலிருந்து உத்வேகத்தைப் பெறட்டும். நீங்கள் குறைந்தபட்ச நகைகளை அணிந்தாலும், சோக்கர் நாகரிகத்துக்கு மாறினாலும், அல்லது தங்கத்தின் கவர்ச்சி அல்லது வைரத்தின் மகிழ்ச்சி, ஸ்டேட்மெண்ட் மோதிரங்கள், வளையல்கள் அல்லது காலத்தை கடந்த போல்கி நகைகளின் நேர்த்தி, இவற்றில் எதை சேர்க்க விரும்பினாலும் சரி, ஒவ்வொரு சுவைக்கெனவும் ஒரு பிரபலத்திடமிருந்து பெற்ற உத்வேக ஸ்டைல் இருப்பது உறுதி. எனவே, இன்னும் என்ன தயக்கம், முன்னேறுங்கள், நீங்கள் உண்மையிலேயே ஒரு நட்சத்திரம்தான் என்பதை காட்ட பிரகாசமாக ஔ¤ருங்கள் மற்றும் அனைத்து விடுமுறை பார்ட்டிகளிலும் உங்கள் முத்திரையை பதியுங்கள்.