my kalyan mini store - Articles

சீசனின் மிக மகிழ்ச்சியான - கிறிஸ்துமஸ் தொகுப்பில் கல்யாண் ஜுவல்லரி வழங்கும் நகைகளை அணிந்து செல்லுங்கள்

Publisher: blog

கவர்ச்சியாக இருக்க இதுதான் சீசன்.

மகிழ்ச்சியான விளக்குகள், பண்டிகை உற்சாகம் மற்றும் மென்மையான தென்றல் காற்றில் நீடிக்கும் கரோல்களுடன், கிறிஸ்துமஸ் சீசன் முடிவாக வந்தே விட்டது. கவர்ச்சியாக அலங்கரித்து, நார்த் ஸ்டார் போல பிரகாசமாக ஜொலிக்க, இதைவிட சிறந்த நேரம் வேறு உண்டா என்ன? வரவிருக்கும் பண்டிகைகளுக்கென அலங்கரித்துக் கொள்ள உதவ, இதோ எங்களின் பிரத்தியேக கிறிஸ்துமஸ் தொகுப்பை வழங்குகிறோம்.

 உங்களுக்கு விருப்பமான உடையில், தங்கம், மினுமினுப்பு, பளபளப்பு மற்றும் பிரகாசத்துடன் கிறிஸ்துமஸ் சீசனில் அடியெடுத்து வையுங்கள். எதை உங்கள் உடையுடன் ஜோடி சேர்த்து அணிவது என்று இன்னமும் முடிவு செய்ய முடியவில்லையா? ஒரு குஷியான, ஜாலியான கொண்டாட்டத்துக்கென இந்த துணை அலங்காரப் பொருட்கள் வழிகாட்டியை பின்பற்றுங்கள்.

 

பார்ட்டி எங்கே?

நீங்கள் அணிந்து கொள்ளப்போகும் நகைகளின் தேர்வு, பார்ட்டி நடக்க இருக்கும் இடத்தை பொறுத்தது. அது ஒரு ஆபீஸ் பார்ட்டியா அல்லது குடும்பம் மற்றும் நண்பர்களுடனான பார்ட்டியா?ஒருவேளை ஆபீஸ் பார்ட்டியாக இருந்தால், ஒரு நேர்த்தியான மெலிய நிழல் போன்ற உடையை அணிவது, சிலரை திரும்பிப் பார்க்க வைக்கும். பளபளக்கும் வைர நகையுடன் கூடிய துணை அலங்காரப் பொருட்கள் - - ஒரு அழகான வைர நெக்லஸ், வைரத் தோடுகள் மற்றும் ஒரு வைர டென்னிஸ் பிரேஸ்லெட் உங்களை கவர்ச்சியாக தோன்றச் செய்யும். பேண்ட் மற்றும் சூட்கள் உங்களின் ஸ்டைலுக்கேற்ப இருந்தால், நிறைய மெலிய தங்க வளையல்கள் மற்றும் விலையுயர்ந்ததாக தோன்றும் ஒரு வாட்சை கைகளில் அணியுங்கள். காதுகளில் பெரிய தங்க வளையங்களை முயற்சித்துப் பாருங்கள். உங்கள் தோற்றத்தை மேலும் உயர்த்தி காண்பிக்க, ஒரு நீண்ட அடுக்கு குறைந்தபட்ச தங்க சங்கிலியை நீங்கள் தேர்வு செய்யலாம்.

 நண்பர்களிடையே இருக்கையில் கிறிஸ்துமஸ் என்பது மிகவும் வேடிக்கையான விசேஷமாக இருக்கும். ஒரு கருத்தை (theme) தேர்ந்தெடுத்து அதற்கேற்ப உடையணியுங்கள். சீசனின் வண்ணங்களில் நிறத்தை நீங்கள் ஒருங்கிணைக்கலாம் அல்லது கிறிஸ்துமஸ் பிரிண்ட் PJ-களில் கூட ஹேங் அவுட் செய்யலாம். ஒரு கம்பீரமான மற்றும் ஸ்டைலிஷ் தீம், அதிக பிரகாசத்திற்கு அழைப்பு விடுக்கிறது. உங்கள் பளபளக்கும் பட்டுப் புடவைகள் மற்றும் மினுமினுக்கும் வரிசைப்படுத்தப்பட்ட எம்சம்பிள்களை பொருத்தமான நகைகளுடன் இணைந்து அணியுங்கள். சில்வர் மற்றும் கூல் - டோன்டு (நீலங்கள் மற்றும் பர்ப்பிள்கள்) ஆடைகள், ரோஸ் கோல்டு மற்றும் பிளாட்டினம் நகைகளுடன் மிகச்சிறப்பாக பொருந்தும். பார்ட்டிக்கென உங்கள் உடைகளுக்கு பொருந்துமாறு, பெரிய தொங்கட்டான்களை, ஜெம்ஸ்டோன் பதித்த பிரேஸ்லெட்டுகளுடன் ஜோடியாக அணியவும்.

 உங்கள் உடைக்கென, பொன்னிற மற்றும் துடிப்பான சாயல் கொண்ட நிறங்களை (சிவப்பு மற்றும் பச்சை) நீங்கள் விரும்பினால், நாங்கள் தங்கத்தைத்தான் பரிந்துரைப்போம். இந்நாளில் துணை அலங்காரப் பொருட்களை போட்டுக்கொள்ள வெட்கப்படாதீர்கள். ரூபிக்கள் மற்றும் எமரால்டுகள் போன்ற ஜெம் ஸ்டோன் பதித்த நெக்லஸ்கள், உங்கள் உடையின் அழகுக்கு இணையாக இருக்கும். தோடு அல்லது நீண்ட தொங்கட்டான்கள் போன்ற காதணிகளை அதற்கு பொருத்தமாக ஜோடி சேர்த்து அணியுங்கள். பெரிய மற்றும் பிரகாசமான எமரால்டு அல்லது சுற்றிலும் சிறு வைரங்கள் பதிக்கப்பட்ட ரூபி போன்ற ஸ்டேட்மெண்ட் மோதிரங்கள் நிச்சயம் ஒருவர் அல்லது இருவரை பெருமூச்சு விடச் செய்வது உறுதி.

 இப்பொழுது என்ன அணிவது மற்றும் எவ்வாறு துணை ஆபரணங்களை அணிவது என்பது உங்களுக்கு தெரிந்து விட்டதால், உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள், பிரகாசமாக புன்னகையுங்கள் மற்றும் பண்டிகைப் பருவத்தின் மகிழ்ச்சியான தருணங்களை அனுபவித்து மகிழுங்கள்.

 பார்ட்டி தினத்தில் உங்களை அலங்கரித்துக் கொள்வதற்கான அந்த பொருத்தமான நகையை இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறீர்களா? கல்யாண் ஜ்வெல்லர்ஸ்-ன் விலைமதிப்பற்ற பண்டிகை கலெக்ஷனில் பாருங்கள், கிடைப்பது உறுதி.