my kalyan mini store - Articles

உங்கள் வாழ்வின் விசேஷமான நாள்; மணப்பெண் கோலத்தில் தனித்து நின்று பிரமிக்க வையுங்கள்

Publisher: blog

உங்கள் திருமணம் உங்கள் வாழ்வின் விசேஷமான நாள்! எனவே, நீங்கள் ஒரு மின்னும் தாரகையாக மாறும் போது உங்கள் நகைகள் உங்கள் பாணியை உயர்த்த வேண்டும்! உங்களுக்கான சரியான தோற்றத்தை எங்களது வலைப்பதிவிலிருந்து கண்டு பிடிப்பதின் மூலம் அனைவரிடமிருந்தும் தனித்து நில்லுங்கள்.

 

பாரம்பரிய ராணி


உங்களுள் இருக்கும் ராணியை பாரம்பரிய நகைகள் மற்றும் மரபுவழி ஆடைகளுடன் வௌ¤க் கொண்டு வாருங்கள். ரிகாலியாவின் பகட்டான நகைகளிலிருந்து தனித்துவமான மிகப்பெரிய நத்து அல்லது ரத்தினம் பதித்த நெற்றிச் சுட்டி போன்றவற்றை மறக்காமல் அணியுங்கள். கூடுதல் கவர்ச்சிக்கு அடுக்கு டெம்பிள் நெக்லஸ்கள் அல்லது போல்கி நகைகளிடையே ஒன்றை தேர்ந்தெடுங்கள்.

 

நீங்கள் தேர்ந்தெடுக்கும் ரத்தினங்கள் உங்கள் ஆடைகளுடன் பொருந்துவதை உறுதி செய்யுங்கள். அடுக்கான தடிமனான வளையல்கள் மற்றும் ஆடம்பர காதணிகளுடன் விழாவை கொண்டாட நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

 


மேஜிக்கல் மினிமலிஸ்ட் (குறைந்தபட்ச நகைகளில் மாயாஜாலம்)


நீங்கள் உங்கள் திருமணத்தில் ஒரு மென்மையான ஆனால் நேர்த்தியான தோற்றத்தை விரும்பினால், மாயாஜாலம் புரியும் சிறிய அழகான நகைகளுடன் தனித்து தோற்றமளியுங்கள். ஒரு தனித்து தெரியும் சோக்கருடன் உங்கள் தோற்றத்தை மேம்படுத்துங்கள். எல்லா விதமான சோக்கர்களும் பிரமாதமாக இருந்தாலும், நாங்கள் தேர்ந்தெடுப்பது ஒரு போல்கி சோக்கராகத்தான் இருக்கும்.

 

உங்கள் கைகளுக்கு வைரம் பதித்த பிரேஸ்லெட்டுகளையும், உங்கள் தோற்றத்துக்கு மெருகூட்ட இரண்டு சாலிடர்களையும் தேர்வு செய்யவும். காதணிகளுக்கென ஜிமிக்கிகள் அல்லது தொங்கும் காதணிகளுக்கு பதிலாக தோடுகளை நாங்கள் பரிந்துரைக்கிறோம். உங்களுக்கு அதன் தனித்தன்மை பிடிக்குமானால், உங்கள் தோற்றத்தை முழுமையாக்க ஒரு சிறிய நெத்திச் சுட்டியையும் சேர்த்து அணியுங்கள்.

 


சமகாலத்தியது (புதுமையானது) மற்றும் கவர்ச்சியானது


ஒரு சமகால தோற்றத்துக்கு, உங்கள் பிரியமான பாரம்பரிய மற்றும் நாகரிக நகைகளை பொருத்தமாக கலந்து அணியவும். எந்த விதிமுறையும் இல்லாததே இதன் ஒரே விதிமுறை; அதனால், உங்களின் படைப்புத் திறனை உபயோகித்து உண்மையில் உங்களை நீங்களாகவே தோன்றச் செய்யும் ஒரு படைப்பை உருவாக்குங்கள். எங்களின் புதிய பத்மா தொகுப்பிலிருந்து பிரமிக்க வைக்கும் இரண்டு அடுக்குகளுடனான போல்கி நகைகள் மற்றும் ஒரு சோக்கரை அணிவீர்களா அல்லது இறைவன், இறைவிகளை மையமாக கொண்ட பாரம்பரிய வடிவமைப்பிலான நகைகளை தேர்ந்தெடுப்பீர்களா? நீங்கள் அணியப் போகும் செயின்கள், நெக்லஸ்கள் மற்றும் நகைகளைப் பற்றி கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் மற்றும் உங்களுக்கான ஒரு தனித்துவ தோற்றத்தை உருவாக்குங்கள்.

 


டெஸ்டினேஷன் திவா


நீங்கள் ஒரு டெஸ்டினேஷன் திருமணத்தை திட்டமிடுகிறீர்களா? அந்த இடத்தின் பண்புக்கேற்ப உங்கள் உடை மற்றும் நகை அலங்காரத்தை திட்டமிடுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இதற்கு ஒரு உதாரணம் ;- ஒரு கடற்கரை திருமணத்துக்கு, உங்கள் தனித்துவத்தை காட்டும் ஒரு முத்து நெக்லஸ் மற்றும் காதணிகளை அணியுங்கள் மற்றும் அவற்றுடன் வைர பிரேஸ்லெட்கள், மோதிரங்கள் மற்றும் வளையல்களையும் ஜோடியாக அணியுங்கள். முத்துக்கள் மற்றும் வைரங்களின் வெண்மை நிறம், ஒரு கடற்கரை திருமணத்தின் வெப்ப மண்டல சாயலுக்கு பொருத்தமான பளபளப்பை சேர்க்கிறது.

 

இப்பொழுது நீங்கள் உங்கள் பாணிக்கு பொருத்தமான அழகியலை கண்டு பிடித்திருப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் இதை முடிக்கிறோம். உங்களது வாழ்வின் விசேஷமான நாளன்று நீங்கள் ஒரு மகாராணி போல் கம்பீரமாக பிரகாசிப்பீர்கள் என நம்புகிறோம்!