044-71650084

Call Now

Opens at

<All Articles

பழங்கால நவநாகரீகம் : மீண்டும் வருகின்றனவா?

‘’ஒல்டு இஸ் கோல்டு’’. ஆங்கிலத்தில் இதைவிட அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட வேறொரு சொல் வேறு எதுவும் இருக்க முடியாது என்று சொல்லலாம். ஆனாலும், இனிமேல் இப்படிக் கூறுவது பொருத்தமற்றதாகப் போகக்கூடும். குறிப்பாக, நொடிக்கு நொடி நாகரீகங்கள் மாறிக் கொண்டிருக்கும் ஃபாஷன் தொழிலில் ஏராளமான நாகரீகம் வருகின்றன, போகின்றன. சில காலம் அடங்கியிருந்து பின்னர் மிகவும் பிரபலம் ஆகிவிடுகின்றன.

பழங்கால நகைகளைப் பற்றிப் பேசும்போது, நமது மூதாதையர்கள் பயன்படுத்திய நகைகளின் நடைமுறை இன்றைக்கு நாகரீகமாக வருகின்றன. கைவினைக் கலைஞர்களின் மிகவும் நுட்பமான கைவேலைப்பாடுகள்தான் இதற்குக் காரணம். அவர்கள் தங்களது திறமையால் வடிவமைப்பையும், நகைகளையும் என்றென்றும் நிலையான அழகுடன் வடிவமைத்து விடுகின்றனர். மற்றொரு முக்கிய காரணம், பழங்கால நகைகள் பெண்களின் மனதுக்கு மிகவும் நெருக்கமாக அமைந்து விடுகின்றன. ஏனென்றால் தலைமுறை தலைமுறையாகக் கைமாறி வரும் தங்க நகைகளுடன் நுட்பமான மன உணர்வுகள் பின்னிப் பிணைந்துள்ளன. அபூர்வமான தொன்மைச் சிறப்பு மிக்க வடிவமைப்புகளுடன் கூடவே, ஒவ்வொரு பெண்ணும் தனது தாய்/ பாட்டியைப் பற்றிக் கொண்டிருக்கும் இனிய நினைவுகளும் நகைகளின் மதிப்பைக் கூட்டி விடுகின்றன. இன்றைய உலகில் ஃபாஷனாகிவிட்ட பழங்கால நகைகள் சிலவற்றைப் பற்றிப் பார்ப்போம்.

போல்க்கி போன்ற கட் செய்யப்படாத நகைகளில், சுத்தமான, மெருகூட்டப்படாத வைரங்கள் மிகுந்த கலைநயத்துடன் சோக்கர்களாகவும், நெக்லேஸ்களாகவும் பதிக்கப்பட்டு பின்னல் வேலைப்பாடுடன் ஒளிர்கின்றன. இவை இன்றைய மணப்பெண்கள் மிகவும் விரும்பும் நகைகளாகும். ஏனென்றால், போல்க்கி நகைகள் பார்ப்போரின் கவனத்தை மணப்பெண்ணை நோக்கி ஈர்க்கக்கூடிய அழகுடன் மாபெரும் தோற்றமளிக்கின்றன.

எந்த ஒரு பெண்ணும் மிகவும் விரும்பக்கூடிய இன்னொரு வகையான நகை ஜும்க்கி/ஜிமிக்கி/ கோடா கடுக்கன் ஆகும். இவை பல நூற்றாண்டு காலமாக இந்தியா முழுவதும் அணியப்பட்டு வருகின்றன. இந்த வகையான காதணிகள் உண்மையிலேயே அழியாப் புகழுடன் திகழ்கின்றன. ஏனென்றால் ஆரம்பகாலத்தில் இருந்தே இவை எல்லா வயது பெண்களினாலும் மிகவும் நேசிக்கப்பட்டு வருகின்றன. இந்த எளிமையான ஜிமிக்கியை படாடோபமான திருமண உடைகளில் இருந்து அன்றாடம் உடுத்தும் உடைகள் வரை, ஏன் மேற்கத்திய பாணி உடைகளுக்கும் பொருத்தமானதாக வடிவமைப்புகளை உருவாக்கும் நகைக் கலைஞர்கள் புரட்சிகரமாக மாற்றியமைத்துள்ளனர்.

கடா வளையம் எனப்படும் வைரங்களும், விலை உயர்ந்த ஆபரணக் கற்களும் பதிக்கப்பட்ட தங்க வளையல்கள் மிகவும் பிரபலமடைந்துள்ளன. மிகவும் கனமான இந்த கடாக்கள் பெரும்பாலும் ஜோடியாக அல்லது ஒற்றை வளையலாக அணியப்படுகின்றன. பெண்கள் கை நிறைய மெல்லிய வளையல்களை அடுக்கி அணிந்த காலம் மறைந்து விட்டது. குறைவான எண்ணிக்கையில் முழுமையான நகைகளை பெண்கள் அணிய விரும்பும் இந்தக் காலத்தில் கடா வளையங்களை அணிவதில் அவர்கள் மீண்டும் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.

இன்றைய பெண்களிடையே மிகவும் பிரபலமாகிவிட்ட இன்னொரு நகை மூக்குத்தி வளையம் ஆகும். அலங்காரமான பெரிய மூக்குத்திகளில் இருந்து, சின்னதாக வைரம் பதிக்கப்பட்ட நட்சத்திரம் போன்ற மூக்குத்தி வரை மேற்கத்திய டிசைன்களில் எல்லா வகையான வடிவங்களிளும் மூக்குத்திகள் நாகரீகமாக உள்ளன.

மாங் டிக்கா என்பது ஒரு அங்குல நீளமுள்ள அலங்காரமான தங்க பதக்கம் ஆகும். மிகவும் நுட்பமான வடிவமைப்பில் வைரங்கள் பதிக்கப்பட்டு செய்யப்படும் இவற்றை திருமணமான பெண்கள் தங்களது தாலியில் சேர்த்து வைத்து பின்னிக் கொள்கின்றனர்.

Can we help you?