My Kalyan Mini Store, KK Complex, Uthangarai

16M, Ward No-1, Thiruvannamalai Main Road
Uthangarai- 635207

044-71650187

Call Now

Opens at

Articles

குளிர்காலத் திருமணங்களில் உற்சாகமூட்டும் நகைகள் அணிந்து கச்சிதமாகத் தோற்றமளிக்க எடுப்பான குளிர்காலத் திருமண உடை அலங்காரங்கள்

On
குளிர்காலம் வந்துவிட்டாலே திருமணங்களுக்குப் பஞ்சம் இல்லாமல் போய்விடும். உங்களிடம் இருக்கும் மிகச்சிறந்த உடைகளையும் நகைகளையும் அனைவரும் பார்க்கும்படியாக எடுத்துக் காட்டி ஒரு ஹை ஃபாஷன் தோற்றம் அளித்திட குளிர்காலம் உங்களுக்கு உதவியாக இருக்கிறது. மாறாக, கோடைக் காலங்களில் நடைபெறும் திருமணங்கள் சிம்பிளாக உடை அணிந்து, குறைவான அலங்காரங்களுடன் தோற்றத்தை அளிக்க உதவுகின்றன. உங்களுடைய திருமணமோ அல்லது குடும்பத்தில் ஒருவரின் திருமணமோ, குளிர்காலத்தில் நீங்கள் அடுக்கடுக்காக நகைகளை அணிந்து, பஷ்மினாக்களையும், கனமான லெஹங்கக்களையும் அணிந்தாலும் உங்களுக்கு வியர்த்துக் கொட்டுவதில்லை. குளிர்காலங்களில் நடைபெறும் திருமணங்கள் உள்ரங்கிலும், திறந்த வெளியிலும், ஒரு டெஸ்ட்டினேஷன் திருமணமாகவும், பாரம்பரியத் திருமணமாகவும் நடைபெற்று, வெவ்வேறு விதங்களில் மாறுபட்டு ஒரு மேஜிக்கல் நிகழ்ச்சியாக வே அமைகின்றன. உள்ளரங்கில் நடக்கும் திருமணங்கள் மிகவும் சௌகரியமானவை. மிகவும் நெருக்கமான உற்றம் சுற்றத்தார் கலந்து கொள்ள ஒரு பெர்சனல் நிகழ்ச்சியாக அமைந்து விடுகின்றன. மேலும், பின்புற அலங்காரம், சரவிளக்குகள், அல்லது மலர் அலங்காரங்கள் என்பன உங்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கின்றன. மாறாக, திறந்த வெளியில் நடக்கும் திருமணங்கள் இயற்கையான திகைப்பூட்டும் பின்னணியுடன், அனைவரும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியாக அமைகின்றன. டெஸ்டினேஷன் திருமணங்கள் எப்போதுமே மிகவும் ஆடம்பரமானவை. ஜில்லென்று வீசும் கடல்காற்று ஆகட்டும், பரவசப்படுத்தும் மலைப்புறக் காட்சிகள் ஆகட்டும் சின்னச்சின்ன அலங்காரங்கள் யாவும் மறைந்து இயற்கையின் ஆட்சி அங்கே நடைபெறுகிறது. ‘’ இயற்கையான சூழலில் நடந்து செல்லும்போது கிடைக்கும் ஆனந்தம், பார்ப்பதில் கிடைக்கும் பரவசத்தைவிட மிகவும் பெரியது.’’ அதே போல், நீங்கள் அணியும் நகைகளும், அவை தரும் தோற்றமும் இடம், அலங்காரம், மையக் கருத்து, மனநிலை மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றின் வெளிப்பாடாகத் திகழ்கின்றன. இனி நமது திருமணங்களில் மிகச்சிறந்த , பரவசமூட்டும் பகுதி என்ன என்று பார்க்கலாம். அதுதான் நகைகள். ஒவ்வொரு மணப்பெண்ணும் தனது குடும்பத்தினரும், தனது மாமனார் குடும்பத்தினரும் சேர்ந்து நகை வாங்குவதை எதிர்பார்த்திருக்கும் தருணம். முதலில் தனது உடல் அம்சங்களுக்குப் பொருத்தமான நகைகளைத் தேர்ந்தெடுக்கப் பல மணி நேரம் செலவிடுகிறாள். பிறகு அவளை அலங்கரிப்பதற்காக மிகச்சிறப்பான நகைகளைத் தயாரிக்க பல மாதங்கள் ஆகின்றன. திருமணம் என்பது ஒரு மணப் பெண்ணுக்கு என்னதான் முக்கியமான நாளாக இருந்தாலும், அது அவளுக்கு மட்டுமே சிறப்பான நாளாக இருப்பதில்லை. நெருங்கிய நண்பர் அல்லது உறவினருக்குத் திருமணம் நடப்பதாக இருந்தால், பழைய நகைகளை அழித்து புதிது பண்ண நீங்கள் விரும்புவதில்லை. எனவே, புத்தம்புதியதாக நகைகளைத் தேர்ந்தெடுத்துச் செய்வதற்கு திருமணம்தான் பொருத்தமான தருணம். எந்த மாதிரியான நகைகளை வாங்குவது என நீங்கள் தீர்மானிப்பதற்கு உதவியாக இதோ சில யோசனைகள். கைவினை நகைகள் திருமணத்திற்காக நகைகளை வாங்கும்போது விலை என்ன என்று யாரும் ஆராய்ச்சி செய்வதில்லை. எனவே உங்கள் வாழ்க்கையின் மிகவும் முக்கியமான நாளுக்காக மிகச்சிறந்தவற்றை தேடும்போது எதுவும் குறுக்கே வந்துவிடக்கூடாது என நினைப்பது இயற்கைதான். கையால் செய்யப்படும் நகைகள் மிகவும் பிரத்யேகமானவை. ஏனெனில், அவை ஒவ்வொன்றின் பின்னணியிலும் ஒரு கதை உள்ளது. நகையைச் செய்கிறவரின் கலாச்சாரப் பாரம்பரியம், கலை வடிவம், அப்புறம் புதிதாகக் கற்றுக் கொள்ளும் திறன் - இப்படி பல விஷயங்கள் நகை செய்யும்போது வருகின்றன. ஒவ்வொரு நகையையும் மிகுந்த கலை நுணுக்கத்துடன் கட்சிதமாகச் செய்வதற்கு நிறையக் கால அவகாசமும், சிதறாத கவனமும் தேவைப்படுகின்றன. உங்கள் நகையைப் போல வேறு எவரும் அணிந்திருக்கக் கூடாது என நீங்கள் விரும்புவதும் மிக முக்கியமான விஷயமாகிறது. கையால் நகையைச் செய்யும்போது அது ஈடிணையற்ற புதுமையானதாகி, கைகளின் கலையழகும் சேர்ந்து ஸ்டைலானதாகவும், கிராண்டானதாகவும், உங்களுக்கே உங்களின் சொந்தமான நகையாக உருவெடுக்கிறது. காட்சி 1 நாம் பேசும் முதல் காட்சி குளிர்காலத்தில் உள்ளரங்கில் நடத்தப்படும் திருமணத்தைப் பற்றியது. உள்ளரங்கில் திருமணம் நடைபெறும்போது பாரம்பரியமான சிவப்பு மற்றும் பொன்னிறக் கலர்களை நீங்கள் விரும்பக்கூடும். ஏனெனில் இவை மிகவும் செழுமையான, புனிதமான நிறங்கள். தூய்மையைக் குறிப்பதற்காக திருமணங்களில் சிவப்பு நிறம் பயன்படுத்தப்படுகிறது. அதே வேளையில், உங்களுடைய புதிய வாழ்க்கையின் வெற்றியைக் குறிக்க பொன்னிறம் பயன்படுத்தப்படுகிறது. இந்தக் காரணங்களுக்காகவே, சிவப்பும், பொன்னிறமும் உங்களது திருமணங்களுக்காக பொருட்களை வாங்கும்போது பாரம்பரிய சாய்ஸாகி விடுகின்றன. சொக்கத் தங்கத்தை உருக்கி நகைகளைச் செய்து அணியுங்கள். உள்ளரங்கின் பின்புலத்தில் நகைகளின் பளபளப்பு குறையக்கூடும். ஆனாலும், ஒரு செட் ஜிமிக்கி மிகவும் நுட்பமாக வடிவமைக்கப்பட்ட சோக்கர், மூக்கிலே அலங்காரமாக ஒரு புல்லாக்கு - இவை யாவும் சேர்ந்து உங்களுக்கு அந்தக் காலத்து மணப்பெண்ணின் தோற்றத்தைத் தந்து விடுகின்றன மேக்கப் மிகவும் குறைவாகவே இருக்க வேண்டும். சுத்தமான பேஸ், கன்னங்களில் கொஞ்சம் பீச் அல்லது பிங்க் ஷேடு, லேசான ஷேடுடன் கூடிய பிரகாசமான கண்கள், செம்பவள உதடுகள் என அட்டகாசமான தோற்றத்தில் கவனம் செலுத்துங்கள். அமர்ந்திருக்கும் விருந்தினர்களை வரவேற்பதற்காகவும், உங்களுக்கு ராஜகம்பீரமான தோற்றத்தைத் தருவதற்காகவும் உயரமான ஸ்டிலெட்டோவைத் தேர்ந்தெடுங்கள். மணப்பெண்ணுக்கான நகைகளில் குந்தன் மீனா நகைகள் மிகவும் கொண்டாடப்படும் நகைகளாகும். இவற்றில் பட்டைதீட்டப்படாத வைரங்கள், முத்துக்கள், மரகதக் கற்கள், பவளங்கள் ஆகிய ஆபரணக் கற்கள் தங்கத்தில் பதிக்கப்பட்டு தயாரிக்கப்படுகின்றன. இந்த ஆபரணக் கற்கள் பசை போட்டு ஒட்டவைக்கப்படுவதில்லை என்பதால் அவை புடைத்துக் கொண்டு இருப்பதில்லை. இறுதியாக, மிகவும் நுட்பமாக செதுக்கப்பட்ட, கலர்கலரான - அதே வேளையில் பாரம்பரியத் தோற்றம் தரும் அதிநவீன நகை ஒன்று உங்களுக்குக் கிடைத்து விடுகிறது. மீனாகாரி நகைகள் பச்சை, ஊதா மற்றும் பேஸ்ட்டல் கலர்களில் மணப்பெண் தோற்றத்திற்கு ஆதரவான வகையில் செய்யப்படுகின்றன. காட்சி 2 இரண்டாவது காட்சி வெளிப்புறத்தில் திறந்த வெளியில் நடத்தப்படும் திருமணங்கள் பற்றியது. இதில் பாரம்பரியமும், நவீன ஃபாஷனும் கலந்து திருமணங்கள் நடைபெறுகின்றன. ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல, இயற்கைப் பின்னணியில் வெளிப்புறத் திருமணங்கள் நடத்தப்படுகின்றன. எந்த ஒரு திறந்த வெளியையும் உங்களுடைய திருமணத்திற்கான கட்சிதமான இடமாக-சொர்க்க பூமியாக மாற்றி விடலாம். ஒரு சொர்க்கத்தைப் போல அலங்காரங்கள் செய்யப்பட்டு, செட்டிங்குகள் போடப்படுவதால், அதற்கேற்ப நீங்கள் அணியும் உடைகளும் அலங்காரங்களும் படாடோபமாக இருக்க வேண்டும். கிரிஸ்டல்களும், ஆபரணக் கற்களும் வைத்துத் தைக்கப்பட்ட லெஹாங்க்களை நீங்கள் அணியலாம். வானிலை குளிராக இருந்தாலும், உங்களைச் சுற்றிலும் சில்லென்ற உணர்வை நீங்கள் உணர்வீர்கள். சிம்பிளான-ஆனால் கிளாஸியான பிளவுஸ் அணியுங்கள். சேலையோ,லெஹங்காவோ நல்ல வேலைப்பாடுகள் மிகுந்து உங்களைத் தனியே எடுத்துக் காட்டுவதாக இருக்கட்டும். திறந்த வெளி செட்டிங்கில், நிறைய எம்பிராய்டரி செய்யப்பட்ட அடக்கமான கலரில் உள்ள லெஹாங்காவை அணிந்து பாருங்கள். கூந்தலை நீளமாக அவிழ்த்து தொங்க விடுங்கள். லேசாகக் காற்று வீசும்போது உங்கள் கூந்தல் இயற்கையாக அசைந்தாடும். இதற்குப் பொருத்தமாக வெளிர்நிறத்தில் பளபளப்பான மேக்கப் போடுங்கள். கண்களில் கவனம் செலுத்துங்கள். மீனாக்காரி செட் நகைகள் உங்களைத் தனியே எடுத்துக் காட்டட்டும். அடக்கமான கலரில் பளபளக்கும் லெஹாங்க்காவுக்கு ஏற்றமாதிரி, தங்க நகைகளில் சிவப்பு மற்றும் பச்சை கற்கள் பதிக்கப்படவேண்டும். இது தவிர, மயில் பச்சை, பவுடர் புளூ, வௌ¢ளை மீனாக்காரி நகைகள் பொருத்தமாக இருக்கும். இதற்குமேல், உங்களுடைய உடைகளின் நிறத்திற்கு இசைவான நிறத்தில் நகைகளை எடுக்கலாம். கைகளில் இரண்டே இரண்டு ஜடாவ் வளையல்கள் மட்டும் அணிந்து காலியாக விடுங்கள். ஜடாவ் முறையில் நகைகளைச் செய்யும்போது, வைரங்கள், மரகதக் கற்கள், சஃபயர்கள் ஆகிய ஆபரணக் கற்கள் தங்கத்தில் பதிக்கப்படுகின்றன. ஒட்டுமொத்த நிறத்திற்கு ஏற்றதாக உங்களுடைய நகைப் பூச்சு இருக்கட்டும். தீட்டப்படாத வைரங்கள் பதிக்கப்பட்ட போல்கி குந்தன் நகைகள் இந்தியத் திருமண அலங்காரங்களுடன் ஒருங்கிணைந்த ஒரு அலங்கரிப்பாகும். இந்த செட்டிங் குந்தன் எனப்படுகிறது. இதில் தங்க கேஸிங்கில் போல்கி வைரக் கற்கள் பதிக்கப்படுகின்றன. ஆடம்பரத்தின் ஒரு சின்னம்தான் போல்கி குந்தன் நகைகள். தங்கத்தின் மீது நேரடியாக தீட்டப்படாத வைரக்கற்கள் பதிக்கப்படுவதால், அழகான வளையல்களும், நெக்லேஸ்களும், காதணிகளும், மோதிரங்களும், மாங் டிக்காக்களும் உருவாகின்றன. இது தவிர, பவளங்கள், மரகதங்கள், சஃபயர்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தியும் குந்தன் அல்லது ஜடாவ் நகைகளைத் தயாரிக்கலாம். இதே போல், சில குந்தன் நகைகளில் ரோஸ் கட் வைரங்கள் , டபுள் கட் வைரங்கள், முத்துக்கள் ஆகியன பயன்படுத்தப்பட்டு, மிகவும் நேர்த்தியான வெண்மை நிறம் கிடைத்து, மணப்பெண்ணுக்கு ஒரு புனிதத் தோற்றத்தைத் தருகின்றன. கைகளால் குந்தன் நகைகளைச் செய்து முடிப்பதற்கு 1-2 மாதங்கள் ஆகும். மிகவும் துல்லியமான கலை நுணுக்கங்களும் இதற்குத் தேவைப்படுகின்றன. மணப்பெண் அடக்கமான கலர்களை விரும்பினால், அவள் சோக்கர், பிரேஸ்லெட், ஜிமிக்கிகள் ஆகியன அடங்கிய நவரத்தின நகை செட்களைத் தேர்ந்தெடுக்கலாம். இவற்றில் பதிக்கப்படும் ஒன்பது ஆபரணக் கற்கள் ஒன்பது கோள்களைப் பிரதிபலிப்பதால் அவை புனிதமானவையாகக் கருதப்படுகின்றன. எனினும், அவை மணப்பெண்ணின் ஸ்டைல்களுக்கும், உடை அலங்காரத்துக்கும் பொருத்தமாக ஈடிணையில்லாதவை. அவை அந்த அலங்காரங்களுக்குத் துணை நிற்பவை. காட்சி 3 மூன்றாவது காட்சி ஒரு ஒயிட் விண்ட்டர் திருமண நிகழ்ச்சியாகும். நீங்கள் ஓரு டெஸ்டினேஷன் திருமணத்தை விரும்பினால், உங்களைச் சுற்றிலும் பனிபடர்ந்து பனிப்படலம் தவழவேண்டும் என நீங்கள் நினைக்கலாம். இந்த மாதிரியான இயற்கை எழில் காட்சிகளை உருவாக்க முயலுங்கள். இதற்கு மேற்கத்திய அல்லது இந்தோ வெஸ்டர்ன் உடை அலங்காரங்களை விரும்பலாம். இதை எடுத்துக் காட்டும் வகையில் மரகதங்கள் பதிக்கப்பட்ட வைர நகைகள்தான் மிகவும் பொருத்தமானவை. கடலோரத்தில் திருமணம் நடைபெறுமானால், வைரங்களும், முத்துக்களும் அல்லது நீலநிற சஃபயர்களும் சேர்ந்த நகைகளைத் தேர்ந்தெடுக்கலாம். இந்த வகையில், அழகான இயற்கைப் பின்னணியைப் பிரதிபலிக்கும் நிறங்கள் பொருத்தமானதாக இருக்கும். ஸ்ட்ராப்பி பிளவுஸ் நீங்கள் அணிந்தால், உங்களுடைய தோற்றத்தை மையப்படுத்தும் வகையில் நெக்லேஸ் இருக்க வேண்டும். எனவே 3 முதல் 4 அடுக்குகள் உள்ள நெக்லேஸ் அல்லது ஒரு சோக்கர் அணியலாம். எடுப்பானதாக காதணிகள் இருக்குமானால், நெக்லேஸ் ஸ்ல¦க்காக இருக்கட்டும். ஒவ்வொரு நிகழ்வுடனும் ஈடுபாட்டை வளர்க்கும் வகையில் வாரிசுரிமையில் வரும் நகைகளை அணியுங்கள். உங்களுடைய குடும்பத்துப் பெண்களுக்கே உரிய தனித்தன்மையை எடுத்துக் காட்டும் வகையில் அலங்காரங்கள் இருக்கட்டும். இதனால் உங்கள் வாழ்க்கையின் மிகவும் விசேஷமான ஒரு நாளில் உங்களுடைய குடும்ப வேரின் சின்னமாக நீங்கள் திகழ்வீர்கள். இதற்குப் பொருத்தமானதாக உங்களுடைய குடும்பத்தின் பாரம்பரிய நகைகளின் ஈடிணையற்ற அழகு இருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. லேசான எடையுள்ள நகைகளை திருமணத்திற்காக யாரும் விரும்புவதில்லை. ஆனால், இந்த டிரெண்டை நீங்கள் தொடங்கி வைக்கலாம். அதனால் ஆபத்தில்லை. லேசான எடையுள்ள நகைகளின் மிகவும் முக்கியமான நன்மை என்னவென்றால், அவற்றை நீங்கள் தொடர்ந்து ரெகுலராக அணியலாம். எனவே உங்களுடைய விசேஷமான நாளுக்காக வாங்கிய நகைகளை, அந்த நாள் முடிந்த பின்னரும், நீங்கள் செல்லும் இடங்களுக்கு எல்லாம் எடுத்துச் சென்று அணிய முடியும். மேலும், லேசான எடையுள்ள நகைகளை ஸ்டைலாகவும், அழகாகவும், நேர்த்தியாகவும் அணியலாம். அதற்கு அடுக்கடுக்காக பல நெக்லேஸ்களையும், வளையல்களையும், பிரேஸ்லெட்டுகளையும் அணிவது பொருத்தமானது. ஒரு திருமண நிகழ்ச்சியின் காக்டெயில் பார்ட்டிக்கும் இந்தத் தோற்றம் கட்சிதமாகப் பொருந்தும். குறிப்பாக, ரோஸ் கோல்டு, ஒயிட் கோல்டு, மற்றும் பிளாட்டினம் ஆகியவற்றில் பற்பல ஸ்டைல்களில் நகைகளை உருவாக்கலாம். ஒரு குளிர்கால திருமணத்தில் அனைவரையும் கவரக்கூடிய வகையில் எவ்வாறு தோற்றமளிப்பது என்பதை நாம் பார்த்தோம். நீங்கள் எந்த ஒரு ஸ்டலைத் தேர்ந்தெடுத்தாலும், புன்னகைதான் மிகவும் பொருத்தமான நகை என்பதை மறக்காதீர்கள். முகத்தில் புன்னகை தவழும்போது உங்களுக்குள்ளே ஒரு தன்னம்பிக்கை பிறக்கும்.
Publisher: Kalyan Jewelers

பளிச்சிடும் வைரங்கள் ; என்றென்றும், எங்கெங்கும்

On
ஆதி அந்தம் இல்லாத காலத்தின் கட்டுக்குள் வராத சிறப்புக்கள் வைரங்களுக்கு உண்டு. அழகான வைரங்கள் பதித்த அட்டகாசமான வடிவமைப்புகளுடன் கூடிய பளிச்சிடும் நகைகளை வாங்குவதற்கு உங்களுக்கு ஒரு காரணம் தேவை இல்லை. பண்டிகைகள் ஆகட்டும், திருமணம் ஆகட்டும், அல்லது மாலை நேரத்தில் வெறுமனே அணிந்து ஜொளிப்பதாக ஆகட்டும் ஒவ்வொரு சந்தர்ப்பத்துக்கும் ஏற்றவையாக வைரங்கள் திகழ்கின்றன. விசேஷமான நாட்களில் வைரங்கள் உங்களை ஜொலிக்க வைக்கின்றன. இப்போது குளிர்காலம் வந்துவிட்டதால், ஏராளமான திருமணங்களோடு நம்மைச் சுற்றிலும் கோலாகலமான கொண்டாட்ட உணர்வு கொப்பளிக்கிறது. சீக்கிரமே நீங்கள் ஒரு மணப்பெண் ஆகப்போகிறீர்கள் என்றால், ஆடம்பரமாக உடையணிந்து கம்பீரமாக காட்சியளிக்க விரும்பலாம். ஏனென்றால் திருமணம் உங்கள் வாழ்வில் ஒரு விசேஷமான நாள். அந்த நாளில் கோடீஸ்வரி போன்ற தோற்றமளிக்க நீங்கள் விரும்பக்கூடும். இந்த நாளில்தான் உங்களுடைய அணிகலன்களுக்கு கோடிகோடியாக நீங்கள் தயங்காமல் செலவிடுவீர்கள். உங்களுக்கு விசேஷமான நாளில் வைரங்கள் மற்றும் ஆபரணக் கற்கள் பதித்த நகைகளை அணிந்து பரவசமடைந்திட நீங்கள் பணம் முதலீடு செய்யத் தயங்குவதில்லை. வைரங்கள், பவளங்கள், மற்றும் மரகதக் கற்கள் பதித்த நெற்றிச் சுட்டி தொங்க வகிட்டில் மங்கலக் குங்குமத்தை தீற்றிக் கொள்ளுங்கள். அதுதான் இந்தியாவின் செழுமையான கைவினைக் கலையின் பாரம்பரியத்திற்கு நீங்கள் செலுத்தும் மரியாதை. நெற்றிச் சுட்டியுடன் சிறியதாக ஒரு புல்லாக்கு அணிந்து கொண்டால், உங்களுடைய பாரம்பரிய மணப்பெண் தோற்றம் முழுமை அடையும் என நாங்கள் கருதுகிறோம். இதனால் செல்வம் செழிக்கும் ஆடம்பரத்துக்கும், மென்மையான எளிமைத் தோற்றத்துக்கும் இடையே ஓர் இணைப்பு உண்டாகிறது. நீங்கள் ஒரு திருமண விழாவுக்குப் போகிறீர்கள் என்றால், சீதா மாலை போன்ற நீளமான நெக்லேசுடன் ஒரு சோக்கர் அணியுங்கள். அல்லது வெவ்வேறு நீளங்களில் அடுக்கடுக்கான நெக்லேஸ்களை அணிந்து, மெல்லிய சேலை உடுத்தினால் ஒரு தேவதை போல நீங்கள் தோற்றம் அளிப்பீர்கள். ஆனால், அடுக்கடுக்கான நெக்லேஸ்கள் ஒன்றின்மீது ஓன்று படிந்து மறைத்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எனினும், நகைகளை அணியும்போது அவை பல வகைகளாக இருந்தாலும், ஒன்றுடன் ஒன்று பொருந்துவதாக இருக்கட்டும். வெவ்வேறு நிறங்களில் ஆபரணக் கற்களுடன் கூடவே, தூய வெண்மை முத்துக்களும், போல்கியும் சேரும்போது பகட்டும் பணிவும் கலந்து ஒரு ரசவாதமே நிகழ்ந்து விடும். உங்களுக்குத்தான் திருமணம் என்றால், மணப்பெண்ணுக்கான உடை சிவப்பு, பொன்னிறத்தில் ஜரிகை வேலைப்பாடுகளுடன் ஜொலிக்க வேண்டும். அப்படியானால், வைரங்களும், பவளங்களும் பதித்த தங்க ஜடாவ் நெக்லேஸுடன் காதணிகளையும், வளையல்களையும் அணியுங்கள். மிகவும் நுட்பமான வேலைப்பாடுடன் கூடிய கால் கொலுசு அணியும்போது உங்களுடைய மணப்பெண் தோற்றம் முழுமை பெறும். வைரங்களும், முத்துக்களும் பதிக்கப்பட்ட தங்க நகைகள் சிவப்பு மற்றும் பொன்னிற உடைகளுக்கு பொருத்தமாக இருக்கும். எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய தெய்வீகமான டெம்ப்பிள் நகைகளை நீங்கள் அணியலாம். இவை பாரம்பரிய டிசைன்கள் மற்றும் சின்னங்களுடன் நிலையான கம்பீரத்தைத் தருகின்றன. மேலும், கைச் சங்கிலி போன்ற மிகவும் பிரபலமான, பிரத்யேகமான சிறுசிறு நகைகள் இல்லாமல் ஒரு மணத்தோற்றம் முழுமை பெறுவதில்லை. பிரேஸ்லெட்டுடன் கோர்க்கப்பட்ட சங்கிலியில் உள்ள வளையங்கள் உங்கள் கரங்களின் அழகுக்கு அழகூட்டும். வளையங்கள், மற்றும் பிரேஸ்லெட்டுகளில் பெரும்பாலும் வைரங்களும், பவளங்களும், ஆபரணக் கற்களும் பதிக்கப்பட்டு, அவை மயக்கும் ஒரு தோற்றத்தைத் தருகின்றன. ஒரு இந்தியத் திருமணத்தில் கட்டாயம் அணிந்தாக வேண்டிய நகை ஒரு ஜோடி வைர சாலிட்டர் காதணிகளாகும். வைரங்கள் பதிக்கப்பட்டு சரவிளக்கு போல் தொங்கும் லோலாக்கு உங்களை வித்தியாசப்படுத்திக் காட்டும். மேலும், இந்த சாலிட்டர் காதணிகளில் கொஞ்சம் கலரும் சேருமானால், பொதுவாக ஜெம்ஸ்டோன்கள், அது இன்னும் எடுப்பாக இருக்கும். மரகதக்கற்களுடன், வைரக்கற்கள் சேரும்போது பரவசமூட்டும் ஒரு சேர்க்கையாக அது இருக்கும். என்றென்றும் ஆண்டாண்டு காலம் நீடித்து நிலைத்திருக்கக்கூடிய பளிச் பளிச்சென மின்னும் வைர நகைகளில் முதலீடு செய்வது உண்மையிலேயே மதிப்பு மிக்கதாகும். போல்கி நகைகளில் கவர்ச்சியைக் கூட்டும் அம்சம் வைரங்களுக்கு உண்டு. போல்கி நகைகளில் தீட்டப்படாத வைரங்களைச் சேர்க்கும்போது, அவை கவர்ச்சியை அதிகரித்து, பிரத்யேகமான ஒரு விசேஷத் தோற்றத்தைத் தருகின்றன. சுத்தமான, வைரங்கள்தான் தீட்டப்படாத, அன்கட் வைரம் எனப்படுகிறது. நீங்கள் ஒரு போல்கி நகை வாங்கும்போது சுத்தமான வைரத்தை வாங்குகிறீர்கள். அது மணப்பெண்ணின் நாணிச்சிவக்கும் முகப்பொலிவுக்கு ஏற்றாற்போல அவ்வப்போது பளிச்பளிச்சென மின்னி விளையாட்டுக் காட்டுகிறது. ஓவ்வொரு நிகழ்ச்சிக்கும், ஒவ்வொரு உடை அலங்காரத்திற்கும் பொருந்துவதாக சாந்த்பாலி நகைகளை நாம் விரும்பி அணிகிறோம். விழாக்களில் கலந்து கொள்ளும்போது, பல அடுக்குகளான போல்கி வைர நெக்லேஸ் அணியலாம். அல்லது பவளம் போன்ற ஆபரணக் கற்கள் பதிக்கப்பட்ட நகைகளை அணியலாம். திருமணங்கள் மட்டுமல்ல, குளிர்கால விருந்துகளுக்கும் ஒயின் நிறத்திலான உடை அல்லது கருப்பு சாட்டின் உடை அணிந்து, அதற்குப் பொருத்தமாக ஒரு சாலிட்டெய்ர் மோதிரம் அணியுங்கள், சின்ன தொங்கட்டான் உங்கள் காதுகளில் இருந்து தொங்கட்டும். அல்லது இந்திய மரபையும், மேற்கத்திய ஃபாஷனையும் கலக்கும் வகையில் காதுகளுக்கு ஒரு மாட்டல் அணியுங்கள். மணப்பெண்கள் நவரத்தின நகைகளை விரும்பி அணிவது மிகவும் பிரபலமாகிவிட்டது. ஏனென்றால், அவை ஆடம்பரத்தை எடுத்துக் காட்டுகின்றன. வைரங்களுடன் ஆபரணக் கற்களும் சேரும்போது உங்களுடைய நகைகள் கலர்கலராக ஜொலிப்பதோடு, உங்கள் திருமண நாள் சடங்குகளில் ஜாதகபலன்களை சரியான சமநிலையில் வைக்கின்றன. காலர் உள்ள நவரத்தின நெக்லேஸ் உங்களுக்கு ஒரு ராயல் உணர்வை உண்டாக்கும். சற்றே மாடர்னாக இருந்து கொண்டு பாரம்பரியத் தோற்றம் தரவேண்டுமானால், உங்களுக்கு நவரத்தின நகைகள் மிகவும் பொருத்தமாக இருக்கும்.
Publisher: Kalyan Jewelers

Can we help you?