Kalyan Jewellers India Limited - Articles

2024-ல் முத்து டிரெண்டுக்கு தாவுதல் : நினைவில் வைக்க வேண்டிய உபயோகமான குறிப்புக்கள்

Publisher: blog

2024-ஆம் ஆண்டில், ஒரு புதிய டிரெண்ட் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது – முத்துக்கள். இந்த பளபளக்கும் உருண்டையான ஜெம்ஸ், வளையல்களிலிருந்து மோதிரங்கள், சோக்கர்கள் மற்றும் தொங்கட்டான்கள் வரை புயல் போன்று நகை உலகத்தை ஆக்கிரமித்துள்ளது. இந்த டிரெண்ட் அலையில் நீங்கள் இணையும் போது, மனதில் நினைவுறுத்திக் கொள்ள வேண்டிய சில ஸ்டைலிங் குறிப்புக்களைப் பற்றி விவாதிப்போம், வாருங்கள்.


பொதுக் குறிப்புக்கள்


முத்துக்களை ஸ்டைலிங் செய்யும் போது, குறைவானது அதிகம் என்பதை நினைவில் வைத்துக் கொள்வது அவசியம். இந்த அழகான ஜெம்ஸ்டோன்களை கொண்ட ஒன்று அல்லது இரண்டு நகைகளை தெரிவு செய்யுங்கள். ஒன்று ஸ்டேட்மெண்ட் நகை மற்றும் மற்றொன்று அதைவிட சிறிய, மென்மையான நகை, மற்றொரு ஃபோகஸ் பாயிண்ட்டில். இதை இரண்டு வழிகளில் செய்யலாம் –


இந்த இரண்டு நகைகளையும் நெருக்கமாக, ஒன்றாக அணிந்து, இணக்கத்தை உருவாக்குங்கள். ஒரு ஸ்டேட்மெண்ட் முத்து மற்றும் வைர சோக்கரை, முத்துக் காதணிகளுடன் அணிதல்.


ஒன்றுக்கொன்று இடைவெளியில் ஃபோகஸ் பாயிண்ட்டுகளில் அவற்றை அணியவும். ஒரு ஸ்டேட்மெண்ட் முத்து மோதிரத்துடன், ஒரு எழில்நயம் வாய்ந்த முத்து மற்றும் வைர நெக்லஸுடன் அணிதல்.


ஒரு பளபளப்பான முத்தின் கனவு வெண்மையை ரோஸ் மற்றும் மஞ்சள் தங்கத்துடன் ஜோடி சேருங்கள்! வெள்ளி மற்றும் வெள்ளை தங்கத்திலிருந்து விலகி இருப்பதை நாங்கள் பரிந்துரைக்கிறோம். ஒரு ஸ்டேட்மெண்ட் நகையை அணிய விரும்பினால், முத்து பதக்கங்களை அடுக்கி, உலோகங்களுடன் கலப்பதால், ஒரு வேடிக்கையான வழியை கண்டுபிடிக்கலாம்.

 

2024-ல், பல்வேறு அழகியல் நகைகள் மற்றும் நிகழ்ச்சிகளில் முத்துக்கள் இடம் பெற உள்ளன. அவற்றின் பாலை ஒத்த பளபளப்புடன், சம காலத்திய பிரேஸ்லெட் வடிவங்கள் மற்றும் கட்டா புசாலு (Gutta Pusalu) போன்ற பாரம்பரிய ஸ்டைல்களை உங்கள் தோழர்களாக்க தயங்காதீர்கள்.

 

நெக்லஸ் மற்றும் காதணிகளின்  முத்துக்களுடன் முத்துக்கள் இணைக்கான எங்களின் பரிந்துரைகள் பின்வருமாறு :-


சங்கிலிகள் மற்றும் நெக்லஸ்கள்


சங்கிலிகள் என்று வரும்போது, வைரங்கள் மற்றும் முத்துக்களை விட சிறந்த ப்ரெஷியஸ் கற்கள் இணை வேறு எதுவும் கிடையாது. இந்த இணையை உபயோகித்து செய்யப்படும் சோக்கர்கள், உங்கள்  உடைக்குப் பொருத்தமான சிறந்த ஸ்டேட்மெண்ட் நகைகளாக இருக்கும். மாற்றாக, உங்கள் உடைக்கு பொருத்தமாக ஒரு நீண்ட சங்கிலி தேவைப்பட்டால், ஒரு ஸ்டேட்மெண்ட் பதக்கத்துடன் கூடிய ரோப் அல்லது கேபிள் சங்கிலி மிகச்சிறந்த தேர்வாக இருக்கும்.

 

காதணிகள்


காதணிகளை பொறுத்தவரை, முத்துக்களில் இரண்டு வகை நகைகள் முக்கியமானவை - எளிமை மற்றும் நேர்த்தியுடன் கூடிய காதணிகள் மற்றும் ஆடம்பரம் மற்றும் செழுமையுடன் கூடிய ஜிமிக்கிகள். சரியான காதணிகளுடன் இணைத்து, உங்கள் உடைகளின் அழகை வெளிப்படுத்துங்கள்.


கடல் முத்துக்களின் பரிசை நீங்கள் தழுவி, மே 2024-ஐ உங்களின் ஆண்டாக ஆக்குங்கள்.