my kalyan mini store - Articles

உங்கள் குழந்தைகளுக்கான ஒரு அழகான தங்கப் பரிசு

Publisher: blog

குழந்தைகள் நாம் வாரி அணைத்துக் கொண்டாடும் சந்தோஷ குவியல்கள். அவர்கள் இந்த உலகம் வழங்கக்கூடிய அனைத்தையும் பெறத் தகுதியுடையவர்கள்..... என்றென்றும் இளமையான, நவ நாகரிக தங்க நகைகள் உள்பட. உங்கள் சின்னஞ்சிறு குழந்தைக்கு ஒரு நவ நாகரிக நகையை நீங்கள் வாங்க விரும்பினால், சரியான நகையை தேர்ந்தெடுக்க நீங்கள் கவனிக்க வேண்டிய சரிபார்ப்பு பட்டியல் இதோ!

 

எந்த வகையான நகைகள்?

நீங்கள் எந்த வகை நகையை வாங்கப் போகிறீர்கள் என்பதை முதலில் முடிவு செய்யுங்கள். மோதிரங்கள் எளிதில் தொலைந்து போகக் கூடியவை என்பதால், அவற்றை தவிர்க்க நாங்கள் பரிந்துரைக்கிறோம். அதற்கு பதிலாக தோடுகள், காது வளையங்கள், பிரேஸ்லெட்கள் அல்லது பதக்கங்களை தேர்ந்தெடுங்கள்.

 

கருத்து / தீம்

குழந்தைகளின் நகைகள் அவர்களுக்கு பிடித்த தீம்கள் அல்லது அவற்றை பிரதிபலிக்கும் கேரக்டர்களை கொண்டு வடிவமைக்கப் படுகிறது. அவை பிரேஸ்லெட்டுகளோ அல்லது பதக்கங்களோ, காதில் அணியும் வளையங்களோ அல்லது தோடுகளோ, அவர்களுக்கு பிடித்த ஒரு கேரக்டர் அல்லது தீம் அதிலிருக்கும்படி தேர்ந்தெடுத்தால், அவர்களின் முகத்தில் புன்னகையை வரவழைப்பது உறுதி! இது போன்ற தீம் அடிப்படையிலான நகைகள், எனாமலையும் உபயோகித்து அவர்களுக்கு பிரியமான கேரக்டர்களின் வண்ணங்களை மீண்டும் உருவாக்குகின்றன.

 

வைரங்களா அல்லது ஜெம் ஸ்டோன்களா?

இதில் யோசிக்க வேண்டிய மற்றொரு முக்கிய விஷயம் நீங்கள் தேர்ந்தெடுக்கும் நகைகள் வைர நகைகளா அல்லது மற்ற விலையுயர்ந்த ஜெம் ஸ்டோன் நகைகளா என்பதே. வைரங்களின் இளமை மினுமினுப்பு, உங்கள் சின்னக் குழந்தைக்கு மேலும் அழகூட்டுகிறது.!

 

கீழே பட்டியலிடப்பட்டிருப்பவை பிரபலமாகக் கிடைக்கும் சில தீம்கள். இவைகளில் ஒன்றையாவது உங்கள் குழந்தை நிச்சயம் விரும்பும் என்பது உறுதி.

 

கார்ட்டூன் கேரக்டர்கள்

குழந்தைகளுக்கு கார்ட்டூன்கள் மிகவும் பிரியமானவை என்பதில் எந்த ரகசியமும் இல்லை! பிரபல கார்ட்டூன் கேரக்டர்களான ஹலோ கிட்டி அல்லது மிக்கி மவுஸ் போன்ற தீம்களில் வடிவமைக்கப்பட்ட நகைகளை உங்கள் குழந்தை வாய் நிறைய புன்னகையுடன் வரவேற்கும். கார்ட்டூன் கேரக்டர்களை போல வடிவமைக்கப்பட்ட பதக்கங்கள், தோடுகள் மற்றும் பிரேஸ்லெட்கள் அனைத்துமே சமமாக பிரமிக்க வைக்கும் மற்றும் அவற்றில் வைரங்களும் பதிக்கப்பட்டிருக்கலாம்.

 

பூக்கள் மற்றும் பழங்கள்

பூ மற்றும் பழ தீம் டிசைன்கள் பல்வேறு நிறங்கள், வடிவமைப்புக்கள் மற்றும் டிசைன்களை வழங்குவதால் இந்த நகைகள் உங்கள் குழந்தைக்கு வேடிக்கையாகவும் சுவாரசியமாகவும் இருக்க உதவுகின்றன!

 

எழுத்துக்கள்

உங்கள் குழந்தையின் பெயர் கொண்ட எழுத்துப் பதக்கங்கள், அவர்கள் விரும்பக்கூடிய தனிப்பயனாக்கப்பட்ட பரிசு! ஔளிரும் வைரங்கள் அல்லது ஜெம்ஸ்டோன்கள் கொண்ட வடிவமைப்புகளுடன் இந்த பதக்கங்கள், எண்ணற்ற எழுத்துருக்களில் கிடைக்கிறது

 

விலங்குகள்

விலங்குகளின் தீம் கொண்ட நகைகள் பரந்த டிசைன் வகைகளை கொண்ட ஒரு பன்முக தீம். விலங்குகளின் தீம் கொண்ட நகைகள், வைரங்கள், ஜெம்ஸ்டோன்கள், முத்து மற்றும் எனாமல் போன்றவை பதிக்கப்பட்டு, விரிவான வண்ணங்களைக் கொண்டு, ஒரு தனித்துவ தோற்றத்தை வழங்குகின்றன.

 

இந்த வலைப்பதிவு உங்கள் வாழ்வின் விலைமதிப்பில்லா அங்கமான உங்கள் செல்லக்குழந்தைக்கு பொருத்தமான நகையை வாங்க உங்களுக்கு உதவும் என நம்புகிறோம்.