Kalyan Jewellers, Hamdan Street, Abu Dhabi

Shop No-1 & 2, Omeir Bin Yousuf Mosque - Zone 1E3-01
Abu Dhabi- 43680

(971)800-0320969

Call Now

Opens at

<All Articles

கல்யாண் ஜீவல்லர்ஸின் சங்கல்ப் சேகரிப்புடன் துர்கா

பூஜையை கொண்டாடுங்கள்இந்த ஆண்டின் மிகச்சிறந்த தருணம் இதோ வந்துவிட்டது! முன்பனிக் காலத்தின் அழகான வானம், கொட்டு மேளங்களின் லயம் மாறாத இசை, மல்லிகையின் நறுமணம், அழகுற அலங்கரிக்கப்பட்ட பூஜை பந்தல்கள், அழகாக புத்தாடை புனைந்த ஆடவர் மற்றும் பெண்டிர் - வங்காளத்தில் துர்கா பூஜையுடன் தொடர்புடைய பிம்பங்களாகும். மேற்கு வங்காளத்திலும், நாட்டின் இதர பகுதிகளிலும் அஸ்வினி மாதத்தில் துர்கா பூஜை கொண்டாடப்படுகிறது.. வட இந்தியாவில், இந்தப் பண்டிகை நவராத்திரி என்றும், தசரா என்றும் அழைக்கப்படுகிறது.

எருமை வடிவம் எடுத்து வந்த மகிஷாசுரனை துர்கா தேவி வதம் செய்து அழித்து அடைந்த வெற்றி துர்கா பூஜையாகக் கொண்டாடப்படுகிறது. வங்காளம் முழுவதிலும், கிழக்கு இந்தியாவின் சில பகுதிகளிலும் பெண் சக்தியின் வலிமையை எடுத்துக் காட்டும் வகையில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் அமைந்துள்ளன. அன்பு, ஆற்றல், மனத்திட்பம், அறிவு, தீமையைத் தண்டிக்கும் திறன், அழியா அழகு ஆகியவற்றின் சின்னமாக துர்கா திகழ்கிறாள். துர்கா தேவியின் சிலைகள் பளிச்செனப் பிரகாசிக்கும் சேலைகள் அணிவிக்கப்பட்டு, பாரம்பரிய வங்காள நகைகள் பூட்டி அலங்கரிக்கப்படுகின்றன.

இந்த வலிமையின் அடிப்படையில்தான் இத்தனை ஆண்டுகளாக இலக்கியங்களிலும், திரைப்படங்களிலும் வங்கப் பெண்கள் சித்தரிக்கப்படுகின்றனர். எனவே, வங்கப் பெண்கள் தங்களது மனவலிமை மற்றும் கருணையைக் கொண்டாடும் வகையில், இந்த பூஜை தினங்களில் அழகுஅழகான சேலைகளும், பாரம்பரிய எத்னிக் நகைகளும் அணிந்து தங்களை அழகுபடுத்திக் கொள்கின்றனர்.

பண்டிகை நாட்கள் தொடங்குவதற்கு முன்பே, ஆனந்தமும், உற்சாகமும், விழாக்கால பரவசமும் நம்மால் உணர முடிகிறது. இந்த பதினோரு நாட்களும் இந்த ஆண்டிலேயே மிகவும் மகிழ்ச்சியான நாட்களாகும். ஆண்களும், பெண்களும், முதியோரும், இளையோரும் அனைவரும் ஒன்று சேர்ந்து உற்சாகத்துடன் கொண்டாடி, ஒவ்வொன்றாக பூஜை பந்தல்களைக் கண்டு களித்து, சுவையான உணவு வகைகளை உண்டு, மிக முக்கியமாக தங்களுக்குப் பிரியமானவர்களுடன் நேரத்தைக் கழித்து அனுபவித்து மகிழ்கின்றனர்.
பாரம்பரிய வங்காளி நகைகள் அணிந்தால்தான் வங்கப் பெண்கள் முழுமை அடைகின்றனர். காலத்தின் சோதனைகளை வென்று நிற்கும் தங்க நகைகளை அவர்கள் பெரிதும் மதித்துப் போற்றுகின்றனர். மற்றும் இதர விலைமதிப்பற்ற உலோகங்களினால் செய்யப்பட்ட நகைகளையும் அவர்கள் விரும்பி அணிகின்றனர். அழகான சேலைகளுக்குப் பொருத்தமாக, சிக்கென இருக்கும் புதிய டிசைன்களில் இருந்து பாரம்பரிய கைவினை நகைகள் வரை அணிந்து, கால் கொலுசுகள் தழையத் தழையத் தரையைத் தொட சிணுங்கியபடி நடந்து ஒவ்வொரு பெண்ணும் தனக்குள் மறைந்திருக்கும் தேவதையை வெளிக்காட்டுகின்றனர்.

மகா சஷ்டி: இந்த நாளில், துர்க்கை அம்மன் பூமிக்கு இறங்கி வருகிறாள். வீட்டில் அகால் போதன், ஆமந்த்ரன், அதிவாஸ் என்னும் புனிதச் சடங்குகளை நடத்தி அவளை வரவேற்கும் திருநாள்தான் மகா சஷ்டி. நறுமணம் கமழும் பூஜை சடங்குகளுடனும், கொட்டு முழக்கங்களுடனும் அடுத்த சில நாட்களுக்கு அன்னை துர்க்கை நமது வாழ்க்கையின் ஓர் அங்கமாக ஆகிவிடுவதைக் குறிக்க அடுத்தடுத்து பல நிகழ்வுகள் நடந்தேறுகின்றன. இந்த நாள் ஒவ்வொரு வங்காளிக்கும் அவரவர் வேர்களை நினைவூட்டுவதாக அமைகிறது. துர்க்கை அம்மனுடன் கூடவே, இந்த சில நாள் கொண்டாட்டத்திற்காக வங்காளிகள் ஒவ்வொருவரும் எந்தப் பகுதியில் இருந்தாலும் ஊருக்கு வந்து சொந்தபந்தங்களுடன் கூடிக்குலாவி மகிழ்கின்றனர். மலரும் நினைவுகளுடன் சிரித்து மகிழ்ந்து களிக்கின்றனர்.

மகா சஷ்டி தினத்தன்று, துர்க்கை அம்மனும், அவளது குழந்தைகளும், அசுரர்களும் முழுத் தோற்றத்தில் வெளிப்படுகின்றனர். அவர்களின் முகத்திரை விலக்கப்பட்டு, நுட்பமாக நெய்யப்பட்ட பட்டு உடைகள் மற்றும் நகைகளுடன் அலங்கரிக்கப்படுகின்றனர். அன்னையின் படைபரிவாரங்கள் தங்களது அஸ்திரங்களை ஏந்திக் கொண்டு வெளி வருகின்றனர். விழாக்கோலம் களை கட்டுகிறது. மூலை முடுக்கு எல்லாம் விளக்குகள் ஒளிவெள்ளத்தைப் பாய்ச்சுகின்றன. சமுதாயம் முழுவதுமே கொண்டாட்டத்தில் பங்கேற்று, பாரம்பரிய வங்காளி உடைகளையும், நகைகளையும் அணிந்து ஊர்வலத்தில் கலந்து கொள்கின்றனர்.

இது பண்டிகைக் காலத்தின் முதல் நாள் என்பதால், செமி காஷுவல், இந்தோ-வெஸ்ட்டர்ன், சல்வார் குர்த்தா அல்லது காட்டன் சேலைகள் என்று உடைகளை அணிவது எழுதப்படாத விதியாகிறது. எனவே, நேர்த்தியான சல்வார் கமீஸ் அல்லது ஒரு சேலை உடுத்தி, குறைவான மேக்கப்புடன், லேசான கண்மை தீட்டி, பகட்டாக இல்லாமல் முகப்பொடி தூவி, அட்டகாசமான அதரங்களுடன் தோற்றமளிக்கின்றனர்.
பகல் பொழுதில், மிகவும் பிரகாசமான மற்றும் லைட்டான ஷேடுகளில் சேலைகள் அணிந்து அவற்றுக்குப் பொருத்தமாக அற்புதமாகத் தொங்கும் பென்டண்ட்டுடன் கூடிய தங்கச் சங்கிலி போன்ற நெக்லேஸ் அணிகின்றனர். பிளெய்ன் தங்க வளையல்களைக் கைகளிலும், காதுகளில் லேசான எடையுள்ள தங்க ஜிமிக்கிகளையும் அணிகின்றனர்.

மாலை நேரத்தில், ஜாமண்டி எனப்படும் பகட்டான பட்டுச் சேலையும், அதற்குப் பொருத்தமாக குந்தன் காதணிகள் அல்லது பாரம்பரியத் தோற்றத்திற்காக தங்க நெக்லேஸ் அணிகின்றனர்.

மகா சப்தமி என்பது கொண்டாட்டங்களின் ஆரம்ப நாளாகும். அன்றுதான் அன்னை துர்க்கை உயிர்த்தெழுகிறாள். புனிதமான சடங்குடன் அவளுக்குக் கண்கள் திறக்கப்படுகின்றன. முதல் தடவையாக அன்னை இந்த அவனியைப் பார்க்கத் தொடங்குகிறாள். வாழை மரத்தை ஒரு மணப்பெண் போல அலங்கரித்து, அதில் துர்க்கை அம்மனின் ஆன்மா இறக்கப்படுகிறது. இந்தச் சடங்கு ‘பிராண் பிரதிஷ்டா’ எனப்படுகிறது.

மகா சப்தமி நாளில் எடுப்பாகவும், கவர்ச்சியாகவும் தோற்றமளித்திட நீர்நீலம், இளஞ்சிவப்பு அல்லது மஞ்சள் நிறங்களில் பின்னல் நெசவு சேலைகளை அணிகின்றனர். பகட்டான, அதே வேளையில் குறைவான ஆடம்பரங்களுடன் கூடிய சல்வார் சூட் அல்லது ஒரு குர்த்தி அவற்றுக்கு ஏற்ப அலங்காரங்கள், நகைகள் அணியப்படுகின்றன. உதடுகளில் கோரல் சாயம் பூசப்படுகிறது. அல்லது லேசாக தடவப்படுகிறது.

நகைகள் அணியும்போது, நினைவிருக்கட்டும், சிம்பிளான நகைகள்தான் அட்டகாசமாகத் தோற்றமளிக்கும். எனவே, காதுகளில் ஒரு ஜோடி வைரத் தோடு அல்லது மீனாக்கரி மற்றும் பல வளையங்கள் கோர்க்கப்பட்டு கையால் வடிவமைக்கப்பட்ட காதணிகள் உங்களுக்கு முழுமையான தோற்றத்தைத் தரும்.

மாலை வேளைகளில், ஸ்மோக்கி கண்கள் மற்றும் எடுப்பான உதடுகளுடன் வெளியே வலம் வாருங்கள். மாலை நேரத் தோற்றத்தை முழுமையாக்கிட யதார்த்தமான நிறங்களில் தங்கத்தில் செய்யப்பட்ட ஸக்கா, போலா, மற்றும் நோவா நகைகளும், பாரம்பரிய வங்காளி சீதா மாலையும் உதவுகின்றன. பவளம், மரகதம், வைரம் போன்ற விலைமதிப்பற்ற கற்கள் பதிக்கப்பட்ட தங்க அல்லது வெள்ளி வளையல்களை அல்லது ஒரு ஷாராவுக்கு துணையாக கைகளில் மாட்டுங்கள்.

குறைவான அளவில் பிளாட்டினம் அல்லது ஒயிட் கோல்டு நகைகள் இக்கால ஃபாஷனுக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்ந்து, ஃப்யூஷன் உடைகளுக்குப் பொருத்தமாக உள்ளன.

மகா அஷ்டமி: மகா அஷ்டமி தினத்தன்று மிகவும் எலிகண்ட்டான சேலைகளையும், பாரம்பரிய நகைகளையும் அணியுங்கள். இந்த நாளில்தான் துர்க்கை அம்மன் மகிஷாசுரனைக் கொன்றதாக ஐதீகம். இந்த நாளில் அஷ்டமியும், நவமியும் சந்திக்கும் வேளையில் அஞ்சலி மற்றும் சாந்தி பூஜைகள் நடத்தப்படுகின்றன.

மகா அஷ்டமி காலை நேரத்தில், எடுப்பான, கண்களைக் கவரக்கூடிய லிப்ஸ்டிக் போடுங்கள், சிவப்பு அல்லது மரூன் நிறத்தில் இருந்தால் மிகவும் கவர்ச்சியாக இருக்கும். கண்களுக்கு டார்க்காக மேக்கப் பண்ணுங்கள். ஆனால், பகல் மற்றும் இரவு நேரக் கொண்டாட்டங்களுக்கு ஏற்ப கலரை மாற்றிக் கொள்ள வேண்டும்.

இந்த நாளில் கிளாஸிக்கான பெங்காலி ச்சூர் நகைகள் அணிவது பொருத்தமாக இருக்கும். தங்க வளையல்கள் நல்ல அதிர்ஷ்டம் மற்றும் வெற்றியின் அடையாளம் என்பதால், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் வளையல்களை கைகளில் மாட்டுங்கள். இதற்கு மாற்றாக, பிரேஸ்லெட் அல்லது பலா அணிந்தால் கைகளின் அழகைக் கூட்டும். இறுதியாக, சிக் அல்லது சோக்கர் மற்றும் ஜும்க்காக்களினால் உங்கள் தோற்றம் முழுமை பெறும்.

ஒயிட், ஆஃப் ஒயிட் அல்லது பேஸ்ட்டல் கலர்களில் நேர்த்தி மற்றும் எடுப்பான அழகை தூக்கிக் காட்டும் வகையில், கைகளால் தயாரிக்கப்பட்ட கான் பாஷா அல்லது காது கஃப்கள் அணியுங்கள். மேக்கப் மென்மையாக இருக்கட்டும். தற்காலப் பெண்மணிகளின் தோற்றத்தை கச்சிதமாக்கிட பாரம்பரியமும், இக்கால ஸ்டைலும் கலந்த நகைகள் அணிவது நல்லது.

துர்கா பூஜையில் மிகவும் முக்கியமான சடங்கு சாந்தி பூஜையாகும். அஷ்டமி திதியின் கடைசி 24 நிமிடங்கள் மற்றும் நவமி திதியின் முதல் 24 நிமிடங்கள் சாந்திக் கலப்பு எனப்படுகிறது. இது அஷ்டமி மற்றும் நவமியின் புனிதமான சந்திப்பாகும். இந்த நேரத்தில் நடத்தப்படும் சாந்தி பூஜை பக்தர்களின் மனதில் வலுவான பக்தி உணர்வுகளைக் கிளர்ந்தெழச் செய்கிறது. ஏனென்றால் இந்த நேரத்தில்தான் சண்ட- முண்ட அசுரர்கள் அம்மனின் முன்னால் வீழ்ந்தனர். அவள் தீமைகளை மீண்டும் வென்று காட்டினாள்.
சாந்தி பூஜையின்போது சாமுண்டி அவதாரத்தில் வரும் துர்க்கை அம்மனை கொட்டுமேளங்களின் முழக்கங்களுக்கு இடையே நாம் வணங்குகிறோம். தீமையை எதிர்த்து நன்மை வெற்றி கொண்ட தருணம் இது. மேலும், பெண் சக்தியின் வெற்றியையும் இது குறிக்கிறது. துர்க்கை அம்மன் மகிஷாசுரனின் முன்னால் மஞ்சள் சேலை அணிந்து, பொன்னிறத்தில் பொலிந்து காட்சி தருகிறாள். அநீதியையும், அவமானத்தையும் தடயமே இல்லாது துடைத்து ஒழிக்கிறாள்.

இந்த வேளையில். பிரகாசமான நிறத்தில் அல்லது மஞ்சள் நிறத்தில் சேலை அணிந்து, தங்க ஜிமிக்கிகள் மற்றும் பலவரிசை நெக்லஸ்கள் அல்லது ஏழு அடுக்கு மாலை அணியும்போது உங்களின் தோற்றம் முழுமை அடையும். போல்கி நெக்லஸ் அல்லது கலர் நெக்லஸ் இந்த நேரத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். மேக்கப்புக்கு எடுப்பான லிப்ஸ்டிக், பளிச்சிடும் ஐ ஷேடோ, மற்றும் கன்னக் கதுப்புக்களில் செம்பவள நிறத்தில் பிளஷ் பூச்சு நன்றாக இருக்கும்.

மகா நவமி: மகா நவமி தினத்தில் மகா ஆரத்தி எடுக்கப்படுகிறது. ஆரத்தியில் எரியும் நெருப்பு தீமையை ஒழிக்க துர்க்கை அம்மன் எரிக்கும் நெருப்பைக் குறிக்கிறது. இந்த நாளில் மக்கள் தங்களது உண்ணா நோன்பை முடிக்கின்றனர்.

நவமி கொண்டாட்டத்திற்காக, பாரம்பரியமான அலங்காரங்களைச் செய்யுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். அது நேர்த்தியாக இருக்கும். பாரம்பரிய பெங்கால் காட்டன் புடைவைகளை அணிந்து அதற்குப் பொருத்தமாக பாரம்பரிய பெங்கால் நகைகளை அணியுங்கள்.

நவமி தினத்தில் எடுப்பான கண்களுடன், கலர் அல்லது ஷிம்மர் போட்டு, ஐஷேடோவுக்கு பொருத்தமான லிப்ஸ்டிக் தடவுங்கள். நகைகளுக்கு, கலவி சங்கல்ப் தங்க வளையல்களை மாட்டுவது பொருத்தமாக இருக்கும். அவற்றின் நேர்த்தியும், செழுமையும், நுட்பமான வேலைப்பாடுகளும் துர்க்கை அம்மன் கைலாயத்திற்குத் திரும்பும் கடைசி நாள் கொண்டாட்டத்திற்குப் பொருத்தமாக இருக்கும்.

இதற்கு இணையாக, கைவளையல்களுக்கும், சரவிளக்கு போலத் தொங்கும் காதணிகளுக்கும் பொருத்தமாக பென்டன்ட் உள்ள நெக்லேஸ் அணியலாம். இந்த காம்பினேஷன் பளிச்செனத் தெரியலாம். ஆனால் ‘’ அடித்து வீழ்த்துவது போல் ‘’ இருக்காது. கடைசியாக, சௌகரியமான ஃபாஷன், கெட்டியான ஸில்ஹௌட்ஸ், ஸ்ட்ரெயிட் கட்ஸ் ஆகியவற்றைத் தேர்ந்தெடுங்கள். கூடவே, மாலை வேளையில் ஆண்டிக் நெக்லேஸும், நுட்பமாக வடிவமைக்கப்பட்ட மூக்குத்தி வளையமும் அணியலாம்.

விஜய தசமி: இந்த நாளில், துர்க்கை அம்மன் தமது கணவரான சிவபெருமானுடம் சேர்வதற்காகத் தமது பயணத்தைத் தொடங்குகிறார். நீர்நிலையில் அடையாளப்பூர்வமாக சிலை கரைக்கப்பட்ட பிறகு, ஒரு குடத்தில் நீர் நிரப்பி, அதில் வேப்பிலைகளைச் செருகி, சுமங்கலிப் பெண்கள் ‘ சிந்தூர் கேலா’ சடங்கை நிகழ்த்துகின்றனர். இது அன்னை துர்க்கை கணவர் சிவபெருமானுடன் இணைவதைக் குறிக்கிறது. கண்களில் கண்ணீர் மல்க, அம்மனின் நெற்றியில் குங்குமம் சாற்றி அவளுக்கு விடை கொடுக்கின்றனர். அவளுக்கு இனிப்பு ஊட்டுகின்றனர். அவள் பாதங்களைத் தொட்டு வணங்குகின்றனர். அதன் பிறகு, பெண்கள் பரஸ்பரம் முகங்களில் மஞ்சள் பூசி தங்களது சுமங்கலித் தன்மையைக் கொண்டாடுகின்றனர்.

புகழ்பெற்ற சிவப்பு பார்டருடன் கூடிய வெள்ளைச் சேலையான லால் பத் ஷாதா சேலை அணிந்து, பண்டிகையின் கடைசி நாளைக் கொண்டாடுகின்றனர். இந்தச் சடங்கின்போது தங்க சோக்கர், சில கைவளையல்கள், ஸக்கா, போலா, நோவா போன்ற நகைகளை அணியலாம் என பரிந்துரைக்கிறோம்.

மணிக்கட்டில் பளிச்சிடும் மகரமுக்கி பலாவும், காதுகளில் வங்காளிகளுக்கு ஒரு தனித்தன்மை வாய்ந்த சின்னமாகத் திகழும் சந்திரபாலா தோடும் அணியுங்கள். நளினமாகத் தோற்றமளிக்க ஒவ்வொரு விரலிலும் மோதிரங்களுடன் கையில் ரத்னச்சூர் பிரேஸ்லெட் அணியுங்கள். இது பெரிதும் மயில் அல்லது தாமரை வடிவ டிசைன்களில் செய்யப்படுகிறது.

நிறைவு
வங்கப் பெண்களின் உண்மையான அழகு துர்கா பூஜை கொண்டாட்டங்களின்போதுதான் வெளிப்படுகிறது என்று பொதுவாக நம்பப்படுகிறது. துர்க்கை அம்மன் அமைதி, மகிழ்ச்சி, வலிமை மற்றும் வெற்றியைக் குறிக்கிறாள். துர்கா பூஜையின் உணர்வை எதிரொலிக்கும் வகையில் சங்கல்ப் நகைகளின் கலெக் ஷன் அமைந்துள்ளது. வங்கத்தின் துடிப்பான பண்டிகைகளுக்கும், பலதரப்பட்ட கலாச்சாரம் மற்றும் மக்களுக்கும் உண்மையான அஞ்சலியாகத் திகழும் இந்த கலெக் ஷன் நகைகள் ஒவ்வொன்றும் அந்தந்த வட்டாரங்களில் ஷாப்பிங் செய்வோரின் விருப்பங்களை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளன.

மிகவும் நுட்பமாக வடிவமைக்கப்பட்ட ஆண்டிக் நகைகளில் இருந்து எத்னிக் குந்தன் நகைகள் செட் வரை, ஒவ்வொரு நகையும் பிரம்மாண்டமாக , வங்காளத்தின் கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் வகையில் நுண்ணிய விவரங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளன. சங்கல்ப் என்பது கல்யாண் ஜீவல்லர்ஸ் வழங்கும் ஒரு பாரம்பரிய நகை வடிவமாகும். இது தற்கால உணர்வுகளைப் பிரதிபலித்து, பாரம்பரியத்தைத் தழுவி செய்யப்பட்டுள்ள காலத்தை வென்ற நகையாகும். இந்த வகை பாரம்பரிய நகைகள் அழகுபடுத்துவதோடு, வளச்செழிப்பு மற்றும் நம்பிக்கையின் சின்னமாகவும் திகழ்கின்றன.

கல்யாண் ஜீவல்லர்ஸ் வழங்கும் சங்கல்ப் நகைகள் கலெக்ஷன், வங்காளிக் கலாச்சாரத்தின், சிறப்பாக துர்கா பூஜையின் சாராம்சத்தை உண்மையிலேயே சித்தரிக்கின்றன. இதன் நுட்பமான வேலைப்பாடுகளும், நளினமான டிசைன்களும், குறை ஒன்றும் இல்லாத நேர்த்தியும் சங்கல்ப் கலெக் ஷன் மற்ற வகை நகைகளில் இருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுகின்றன.

இந்தக் கலெக் ஷனில் பாரம்பரிய தங்கச் சூடியில் இருந்து, சீதா மாலை வரையும், லேசான எடையுள்ள ஜிமிக்கிகளில் இருந்து கான் பஷா வரையும், பாரம்பரியத்தையும், நவீன காலத்தையும் மிகச் சுலபமாக இணைக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன. எனவே, வங்கக் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை எடுத்துக் காட்டும் சில கிளாஸிக் நகைகளை வாங்கும்போது அவற்றில் கல்யாண் ஜீவல்லர்ஸின் சங்கல்ப் கலெக் ஷன் முத்திரை இருக்கிறதா எனப் பார்த்து வாங்குங்கள்.

Can we help you?