Kalyan Jewellers, Gandhipuram, Coimbatore

TS No.1253 1254/13, 5Th Cross, 100 Feet Road
Coimbatore- 641012

044-66205715

Call Now

Opens at

<All Articles

அதிகாரத்தின் ஒரு சின்னமாக ஆபரணக் கற்களின் ராணி எனப்படும் முத்துக்கள்

முத்துக்கள் ‘ ஆபரணக் கற்களின் ராணி’ எனக் கூறப்படுகிறது. இதை மெய்ப்பிக்கும் வகையில் முத்துக்களை எல்லோரும் அணிவதில்லை. பெரும்பாலும் தினந்தோறும் அணிவதில்லை. முத்துச்சரம் அணிந்து திகைக்க வைப்பதற்கு ஒருவிதமான வர்க்கம் மற்றும் நளினம் இருக்க வேண்டும்.

 முத்துக்கள், மண்ணுக்கு அடியில் இருந்து தோண்டி எடுக்கப்படும் மற்ற ஆபரணக்கற்களைப் போன்றவை அல்ல. முத்துக்கள் கடலுக்கு அடியில் இருந்து கிடைக்கின்றன. ஆழ்கடலுக்குள் முக்குளித்துச் சென்று முத்துக்கள் எடுக்கப்படுகின்றது. இம் முத்துக்கள் சிப்பி ஓட்டுக்குலிருந்து உருவெடுக்கின்றன. அந்த வகையில் முத்துக்கள் உருவெடுப்பது நம்புவதற்குறிய ஒரு தோற்றமாகும். சிப்பியின் வயிற்றுக்குள் தூசு அல்லது மணல் போன்ற வெளிப்பொருட்கள் நுழையும்போது அவற்றைச் சுற்றிலும் ஒருவிதமான பிசின் போன்றசுறபி வயிற்றுக்குள் சுரந்து காலப்போக்கில் அவை முத்துக்கள் ஆகி பளபளக்கும் ஆபரணங்களாகி விடுகின்றன. ஒரு முத்து இயற்கையாக உருவெடுப்பதற்கு இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. ஒவ்வொரு முத்தும் தனித்தன்மை வாய்ந்தவை. ஏனென்றால்  ஒரே அளவில், ஒரே வடிவத்தில், ஒரே விதமான பளபளப்புடன் அனைத்து  முத்துக்களும் இருப்பதில்லை.

 காலங்காலமாக பெண்களை அழகுபடுத்திட முத்துக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பண்டைய கால கிரேக்க வரலாற்றில் இருந்து எகிப்தின் பரோவாக்கள் வரை பலம்வாய்ந்த சீன அரச வம்சங்கள்  முதல் மொகலாயப் பேரரசுகள் வரை அரச கருவூலங்களில் முத்துக்களுக்கெனத் தனியிடம் இருந்து வந்துள்ளது. மன்னர்களின் நெருக்கத்தைப் பெற்றவர்களுக்கு முத்துக்கள் அன்பளிப்பாகவும் அளிக்கப்பட்டுள்ளது. அரச குலப் பெண்கள் முத்துக்களை அணிந்து கம்பீரமான தோற்றமளித்துள்ளனர். இன்றைக்கும் கூட, முத்து நகைகள் என்றாலே  பெண்களின் இதயத்திலும், அவர்களின்  ஆடை அலங்காரங்களிலும் தனி இடம் உண்டு. 

 முத்துக்கள் மிகவும் நுட்பமானவை. அவை முகக் களிம்பு, ரசாயனப் பொருட்கள் போன்றவை அவற்றின் மீது தொடர்ந்து பட்டுக்கொண்டே இருக்குமானால் அவை சேதமடையக்கூடும். எனவே ஒரு விசேஷமான நாட்களில் மட்டுமே முத்து நகைகளை அணியும்படி பரிந்துரைக்கப்படுகிறது. ஒற்றை முத்து பதித்த நகை அணியும் பொழுது உயர்ந்த  மற்றும் அழகான  தோற்றத்தைத் தரும் . முறையான அலுவலக உடை அணியும்போது முத்துத் தோடுகளை அணிவது நன்றாக இருக்கும். முத்துக்கள் பதிக்கப்பட்ட காதணிகள் கைச்சங்கலிகள்  அல்லது வளையல்களை தினசரி நகைகளாக அணியக் கூடாது. ஏனென்றால், அவை உடைந்து சிதறிவிடக்கூடிய அபாயம் அதிகமாக உள்ளது. கோலாகலமான கொண்டாட்டங்களுக்கு, முத்துக்கள் பதிக்கப்பட்ட பிறைநிலாக் காதணிகள் மிகவும் பொருத்தமானதாக இருக்கும். மணப்பெண்ணின் அலங்காரங்களில் தங்கம் மற்றும் வைர நகைகள் முக்கிய இடம் வகித்தாலும், சமய சந்தர்ப்பத்தைப் பொறுத்து முத்து நகைகளுக்கென தனியாக ஓர் இடம் உள்ளது.  கழுத்து மற்றும் கழுத்திலுருந்து  இருந்து அடுக்கடுக்கான நீளமான கழுத்து மாலைகள்  வரை முத்து நகைகள் உங்களுடைய தோற்றத்திற்கு ஒரு விதமான மாற்றத்தையும் தோரனையையும் தருகின்றன. இதற்கு மாறாக, முத்துக்கள் கோர்க்கப்பட்ட ஒற்றைச் சரடு நளினமான ஒர் உயர்வான தோற்றத்தைக் கொடுத்து, முறையான கூட்டங்களுக்கு உங்களை பொருத்தமானவராக ஆக்குகின்றது.

 ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் பொருத்தமாக, ஒவ்வொரு நபரின் விருப்பத்திற்கும் ஏற்ப முத்து நகைகளை அழகான பாணியிலும், மிகவும் கவர்ச்சிகரமான வகையிலும் உருவாக்கலாம் என்பது முத்து நகைகளின் சுவையான அம்சமாகும்.

Can we help you?