My Kalyan Mini Store, Eswar Complex, Udumalpet

21, Ward No-12, By Pass Road
Udumalpet- 642126

044-71650095

Call Now

Opens at

<All Articles

கல்யாண் நகைமாளிகை வழங்கும் ஓணம் நகைகளின் கோலாகல உணர்வுகள்

கேரள மாநிலத்தில் இது சிங்கம் மாதம். இந்த மாதம் முழுவதும் பண்டிகைக் கொண்டாட்டங்களின் நறுமணம் கமழ்ந்து கொண்டே இருக்கும். ‘மலையாளிகளின்’ மனதுக்கு உகந்த ஓணம் பண்டிகையை உலகெங்கும் உள்ள மலையாளிகள் ஒன்றுபட்டு, அன்பும் அரவணைப்பும் பொங்கிட கொண்டாடுகின்றனர். கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்தக் கோலாகலக் கொண்டாட்டத்தின் பேரார்வம் தணிந்துள்ள போதிலும், ஓணம் பன்டிகை எடுத்துக் காட்டும் ஒற்றுமை உணர்வு மங்கிவிடவில்லை.

 பண்டையக் காலத்தில் மகாபலி என்னும் அசுரன் இந்த நிலத்தை ஆண்டு வந்ததாக இந்து புராணங்கள் கூறுகின்றன. மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக ஓணம் கொண்டாடப்பட்டு விருந்து படைக்கப்படுகிறது. ஓணம் பண்டிகையை ஒட்டி மக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து, முற்றத்தில் அலங்காரமாக மலர்களைக் கொண்டு ‘’பூக்கோலம்’’ என்னும் வண்ணக் கோலங்கள் போடுகின்றனர். பூக்கோலத்திற்கு  நடுவே ‘’ஓணத்தப்பன்’’ என்னும் களிமண் அகல் விளக்கு ஏற்றி ஒளியூட்டுகின்றனர். ஒவ்வொருவரையும் மயக்கும் வகையில் மிகவும் விரிவாகவும் ‘விதவிதமாகவும் ’  சமைத்து விருந்து பரிமாறுகின்றனர்.

 பெண்கள் உள்ளூர் நெசவாளிகள் நெய்த பாரம்பரிய நெசவு சேலைகளை அணிந்து அழகுப் பதுமைகளாக வலம் வருகின்றனர். இந்தச் சேலைகளின் சிறப்பு என்னவென்றால், சந்தனவண்ணத்தில் தங்கச் சரிகைகள் வைத்து நெய்யப்படுகின்றன. இதை மக்கள் மிகவும் பிரியமாக ‘’ஓணம் சேலை’’ என்று அழைக்கின்றனர். இந்தக் நெய்த சேலைகளுக்கு  எந்த ஒரு பிரகாசமான வண்ண மேலாடைகளும் பொருந்துகின்றன. கூந்தலில் மல்லிகைப் பூ சூடி பளிச்சிடும் ஓணம் நகைகளை அணிந்து பெண்கள் வரும்போது ஒரு கணம் நின்று பார்த்து வியக்கத் தோன்றும். 

 வளர்ச்சி மற்றும் வளத்தின் அறிகுறியாகவும் ஓணம் கொண்டாடப்படுகிறது. இந்தப் புனிதமான பண்டிகை நாளில் நமது பெண்கள் தங்க நகைகளை அணிந்து வளத்தை எடுத்துக் காட்டுகின்றனர். பாரம்பரிய கேரள நகைகளில் என்றென்றும் பசுமையாக இருக்கும் ஜிமிக்கி கம்மல், பழம்பெரும் சிறப்பு வாய்ந்த காசுமாலை, முல்லை மொட்டுக்களைப் போன்ற அட்டிகை ஆளை மயக்கும் நெல்லிக்காய் மாலை, அட்டகாசமாகவும், எடுப்பாகவும் காட்சியளிக்கும் பாரம்பரிய கோயில் நகைகள் ஆகியன ஓணம் கொண்டாட்டத்தை விசேஷமானதாக ஆக்குகின்றன.

 காலப்போக்கில், புதிய தலைமுறையினர் வந்து ஓணம் கொண்டாட்டத்தை புதியதாக மாற்றி விட்டனர். இன்றைய இளம் தலைமுறையினர் எடை லேசாக உள்ள, குறைவான வடிவமைப்புகளுடன் கூடிய தங்க நகைகளை விரும்புகின்றனர். நெசவு சேலைகள் சந்தனம் மற்றும் பொன் நிறத்தில் இருப்பதால், முத்துக்கள் பதிக்கப்பட்ட தங்க நகைகள் ஒரு மித்த பொருத்தமான புதிய  தோற்றத்தைத் தருகின்றன. மிகவும் எளிமையான இந்த தோற்றம் தற்போதைய தலைமுறையினரின்  பொருத்தமாக உள்ளது.

 தோரனையாக இருந்தாலும் அல்லது விருப்பத்திற்கு இல்லாவிட்டாலும் பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியத் தோற்றம் இப்போதைய நவீன பார்வையுடன் கலந்து சிறப்பாக இருக்கின்றன. கல்யாண் ஜீவல்லர்ஸ் உங்களுக்குப் பிரியமான வகைகளில் நீங்கள் தேர்ந்தெடுக்க வசதியாக பலரகங்களில், பல வகை தோற்றம் தரும் நகைகளை வழங்குகிறது.

Can we help you?